Sthothiram
brother can you pls explain 2 Thessalonians chapter 2:1-10 vasanam..
*பதில்*
இயேசு
கிறிஸ்து எப்படி எழுந்தருளி பரலோகத்திற்கு ஏறி போனாரோ அப்படியே திரும்பி வருவார்
என்று தூதர்கள் அறிவித்ததால் (அப் 1:11) பலர் ஆங்காங்கே தவறான செய்திகளை பரப்பினர்
(2பேது 2:1-3)
1977ல்
கிறிஸ்து வரப்போவதாக தன்னிடம் சொன்னார் என்று பாளயங்கோட்டையிலிருந்து உலக
பிரபலமடைந்த பாலாசீர் என்கிற ஊழியக்காரர் சொல்லி அநேகரின் பணத்தை அபகரித்து தன்
வசம் வைத்துக்கொண்டு – பின்னர் அனைவரையும் அனுப்பி விட்டார். சொத்துக்களை விற்று
இருந்த வேலையும் விட்டு இவரிடம் எல்லா காசையும் கொண்டு போய் கொடுத்து பின்னர் – பைத்தியமான
எனது நெருங்கிய வட்டாரத்திலுள்ள ஒரு பெண்ணை நன்கு எங்கள் குடும்பம் அறியும் !!
இவர்களை போல பலர் உண்டு. இவருடைய சொந்த மச்சான் அவரை விட்டு வெளியே வந்த - நான்
நன்கு அறிந்த எங்கள் குடும்ப நண்பரான புதுக்கோட்டையிலிருந்து எழும்பிய ஒரு ஊழியர்.
(வ3)
தேவனுக்கு
நேராக ஜனங்களை நடத்தாமல் தங்களுக்கு ரசிகர்களாக்கி கூட்டத்தை தங்கள் கூடாரங்களில் சேர்த்து
தங்கள் வங்கி கணக்கில் (டிரஸ்ட் பெயரில் – அதில் தானும் மனைவியும் பிள்ளைகளையும்
நிர்வாகிகளாக்கி) சொத்துக்களை சேர்த்து அதை நிர்வகிக்க தங்கள் குமாரரையும்
குமாரத்திகளையும் ஊழியம் என்ற பிஸினசில் அபிஷேகிக்கப்பட்டவர்கள் என்று இறக்கி
ஜனங்களை குருடாக்கிக்கொண்டிருக்கும் அநேக கிறிஸ்தவ வியாபாரிகள் இன்று ஏராளம் ஏராளம்
!! (வ4)
அக்கிரமக்காரனை
தேவன் தன் வாயின் சுவாசத்தினாலே அழிப்பார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பயங்கரமான சண்டை நடக்கும் என்று ஒரு சில
கூட்டத்தினர் சொல்வதை வேதத்தின் படி அவர்களை நாம் நிதானிக்க வேண்டும். தேவன்
வல்லமையுள்ளவர் –
துப்பாக்கியையும் வாளையும் எடுத்துக்கொண்டு யாரையும் ஜெயிப்பதற்கு அவர் சண்டையிட
வேண்டிய அவசியமில்லை !! (வ6-8)
இரட்சிப்பு
என்றால் என்ன என்று தெளிவாய் சொல்லப்பட்டாலும் அசாதாரண நிகழ்வு என்று ஒன்றை
உணர்ச்சியால் வெளிப்படுத்தி அநேகரை வஞ்சித்து கொண்டிருக்கும் ஆராதனை முறைகள்
இக்காலத்தில் பெருகியிருக்கிறது. மேடைகளில் ஆட்களை பார்த்து ஊதுவதும், ஊளையிடுவதும் குரைப்பதும்
கதறுவதும் மிரட்டுவதும் என்று பல விதமான வித்தைகளை மந்திரவாதி செய்வது போன்று கேலிகூத்தாகி
உள்ளதை இந்த காலங்களில் நாம் பார்த்து வருகிறோம் (வ9-10)
இரட்சிப்பின்
பாதையை / முறையை / படிகளை ஒருவரும் மாற்ற முடியாது. (மாற்கு 16:16)
வஞ்சிக்கப்படாமல்
வசனத்திற்கு மாத்திரம் செவிசாய்ப்போம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக