அவர்களது இரட்சிப்பு பூரணமாகிவிட்டதா? இரட்சிப்பு நிறைவேறிவிட்டதா?
*பதில்*
இரட்சிப்பு
என்ற வார்த்தையின் தூய தமிழ் அர்த்தம் மீட்பு.
அதாவது
பாவத்திலிருந்து மீட்கப்படுவது (மத். 20:28, ரோ.
11:26, எபே.
1:14, 4:30, 1தீமோ.
2:6, 1பேதுரு
1:18-19)
ஒருவர்
“பாவமன்னிப்புக்கென்று” ஞானஸ்நானம் எடுக்கும் போது அந்த
நேரம் வரைக்கும் செய்த பாவங்களின் மன்னிப்பை தேவனிடத்திலிருந்து பெற்று கொள்கின்றார்
(அப். 22:16)
திருமணத்திற்கென்றோ, மதம் மாறுவதற்கென்றோ, கல்லூரியில் சீட் கிடைக்க
வேண்டும் என்றோ, இரட்சிக்கப்பட்டு
ஞானஸ்நானம் எடுத்தேன் என்று சொல்கிறவர்களோ, பெயர்
வைப்பதற்காகவோ, குழந்தையிலேயே
ஞானப்பெற்றோர் முன்னிலையில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம் என்ற பெயரில் செய்யப்பட்ட
சடங்குகளோ இவர்கள் யாரும் வேதத்தில் சொல்லப்பட்ட மீட்பின் / இரட்சிப்பின் திட்டத்தில்
பங்கெடுத்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் சத்தியத்தை கேட்டு, வசனத்தை விசுவாசித்து, மனந்திரும்பி, (பாவத்தை அல்ல) விசுவாசத்தை
அறிக்கையிட்டு, பாவமன்னிப்புக்கென்று
ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவவேண்டும் – அப்போது இரட்சிக்கப்படுகிறார்கள்
(மாற்கு 16:16, அப்.
2:38)
அப்படி
ஒருவர் ஞானஸ்நானம் எடுத்த பின்பு சத்தியத்தை காத்துக்கொண்டு மரணம் வரை அல்லது
கிறிஸ்துவின் வருகை வரை தான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை தக்கவைத்துக் கொள்ள வேதத்தின்
புதிய ஏற்பாட்டு சத்தியத்தின்படி வாழவேண்டும். (எபி. 12:15-17, கொலோ. 2:18-23, அப். 1:24, 1யோ. 3:6, 1யோ. 2:1-29, 1யோ. 1:9, 2பேதுரு 2, 1பேதுரு 4:18)
இரட்சிப்பு
என்பது ஒரு நாளின் செயலல்ல –
கடைசி மூச்சு வரை காத்துக்கொள்ள வேண்டியது. வேதத்தின்படி (மேலே சொன்னவகளை
அடிப்படையாக கொண்டு) ஞானஸ்நானம் எடுத்தபோது இரட்சிப்பின் பாதையில்
நிலைநிறுத்தப்படுகின்றனர். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்
(மாற்கு 13:13)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக