#454 - *மனிதர்களால் வேற்று கிரகத்தில் வாழமுடியுமா?*
*பதில்*
:
இந்த
பூமியிலே வாழும்படியான சூழலை உருவாக்கி தேவன் மனிதர்களை படைத்தார்.
தோட்டம்
முதலாவது உருவாக்கப்பட்டது. தேவையான அனைத்தும் உருவாக்கின பின்பு – மனிதனை கடைசியில்
உருவாக்கினார் (ஆதி 1:22, 25, 26, 28-30)
மற்ற
திரளான கிரகங்களை எல்லாம் தேவன் உருவாக்கி இந்த உலகத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கும்
படி செய்தார் (ஆதி 1:16, உபா
1:10, உபா
4:19, நெகே
4:21, யோபு
9:7, 9:9, சங்
8:3, சங்
136:9)
ஒரு
கட்டத்தில் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் தன் ஒளியை இழக்கும் (ஏசா 13:10, எசே 32:7, யோவேல் 2:10, 3:15, மாற்கு 13:25)
வேறு
கிரகத்தில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்று கேட்டால் - பூமியில் காணப்படுவதைத்
தாண்டி பிரபஞ்சத்தில் எந்தவொரு உயிரும் இல்லை என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும்
இல்லை.
விஞ்ஞான
பரிணாமமோ வேறொரு இடத்தில் வாழ்க்கை இருக்க வாய்ப்பு உள்ளது என்று தேடிக்கொண்டிருக்கிறது.
அந்த விஷயத்தில் வேதம் உண்மையில் அமைதியாக இருக்கிறது.
எப்படியாவது
மேலே போய் இடம் வாங்கி வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒபதியா தீர்க்கதரிசியின்
1:4ம் வசனம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது !!!
அதே
வேளையில் 2பேது 3:8-12ன் படி பார்க்கும் போது பூமியை நியாயந்தீர்க்க வரும்
கிறிஸ்துவானவர் வானத்தையும் பூமியையும் முழுவதுமாக அழிக்கிறார் என்று பார்க்கிறோம்.
ஒரு வேளை வேற்று கிரகத்தில் மனிதர்கள் வாழுகிறார்கள் என்றால் இந்த பூமி மாத்திரம்
தானே நியாயந்தீர்க்கப்பட வேண்டும் மற்றவைகளும் ஏன் உடன்பட வேண்டும்?
இந்த உலகில் செய்த பாவங்களால் மற்றவர்களின் உலகங்கள் ஏன்
அழிக்கப்படவேண்டும்
என்பது என் கேள்வி?
தேவன்
மறைத்த காரியங்கள் இவை. மோட்சத்திற்கு நாம் போகும் வரை காத்திருக்க
வேண்டியிருக்கும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக