வியாழன், 12 செப்டம்பர், 2019

#455 - பரிசுத்த வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்ட காலங்கள் மற்றும் புத்தகங்களை தொகுத்த பணி எப்படி நடந்தது.. இதில் பங்கெடுத்தவர்கள் யார்.. எதன் அடிப்படையில் தொகுப்பட்டது..விளக்கம் வேண்டும்..

#455 - *பரிசுத்த வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்ட காலங்கள் மற்றும் புத்தகங்களை தொகுத்த பணி எப்படி நடந்தது?* .. இதில் பங்கெடுத்தவர்கள் யார்.. எதன் அடிப்படையில் தொகுப்பட்டது..விளக்கம் வேண்டும்..

*பதில்* :
சீகன்பால்க் என்ற டென்மார்க் மிஷனரி 1706ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியில் வந்து இறங்கி ஊழியத்தை துவங்கினார்.

பின்னர் 1708 ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.  போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 1711 மார்ச் 31இல் முடித்தார்.

பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகம் வரை மொழிபெயர்த்திருந்தார். சீகன் பால்க் வேதாகமத்தில் மொழிபெயர்க்காமல் / முடியாமல் விட்டுச் சென்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை சென்னையில் மிஷனெரியாகப் பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் (Benjamin Schultze) முடித்து அச்சேற்றினார்.

இந்தியாவில் தமிழ் மொழியில்தான் முதலாவதாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்தியச் சரித்திரத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற அநேகத் தடைகள் ஏற்பட்டன.

‘கிறிஸ்தவ அறிவு விளக்க சங்கம்’ (SPCK - Society for the Propagation of Christian Knowledge) அச்சு எந்திரமும், ஜெர்மன் நாட்டு நண்பர்கள் அச்செழுத்துக்களும் கொடுத்து உதவினர்.

ஆனால் அவற்றைக் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. அவை சென்னை நகர கவர்னரால் மீட்கப்பட்டன.

மேலும் அச்சு எந்திர முதலாளி வரும் வழியில் இறந்து போக அச்சு வேலை தெரிந்த டேனிய வீரன் ஒருவனைக் கண்டு பிடித்து, 1713 இல், அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தனர்.

ஜெர்மனியிலிருந்து வந்த எழுத்துக்கள் பெரிதாக இருந்தன. அதோடு காகிதப் பற்றாக்குறையும் இருந்திருக்கிது.

எனவே தரங்கம்பாடியிலேயே சிறிய எழுத்துக்களை திரும்பவும் வார்த்தனர். இவ்வளவு கடின உழைப்பிற்குப் பின் 1715, ஜூலை 15 ஆம் நாள் தமிழ்ப் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இவ்வரிய தொண்டினால் வேதம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று.

பர்த்தலோமேயு சீகன்பால்க் 37 வயது வரை மட்டுமே வாழ்ந்தார். 1719ஆம் ஆண்டு, பெப்ரவரி 23 ஆம் தேதி தரங்கம்பாடியில் காலமானார்.

அத்தியாவசியமானதை மாத்திரம் எடுத்து எழுதியிருக்கிறேன்.

*** இந்த தகவல் பல சரித்திர புத்தகத்தை சரிபார்த்து எடுத்தவை ***
இவ்வளவு சிரமப்பட்டு நம் கையில் கிடைத்திருக்கும் இந்த அரிய தேவ வார்த்தைகளுக்கு நாம் கீழ்படிய யோசிக்க வேண்டுமோ?

சங். 119:140

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக