புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் தேவனை ஆவியோடும் கருத்தோடும் பாடுவது என்பதின் அர்த்தம் என்ன?
தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும் எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்
நியாயப்பிரமாண காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை பாடல் மூலமாக எப்படி தொழுது கொண்டார்கள் என்று கற்றுக் கொண்டு இருக்கிறோம்
புதிய ஏற்பாட்டில் தேவனை ஆவியோடு தொழுது கொள்ள வேண்டும் என்பது உள்ளான மனுஷனில் ஒரு பாகமாய் இருக்கிற இருதயத்தில் இருந்து தொழுது கொள்ள வேண்டும்
புதிய ஏற்பாட்டு தொழுதுகொள்ளுதலில் சகலமும் இருதயத்தில் செய்யப்பட வேண்டிய காரியமாய் இருக்கிறது
மத் 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
நாம் தேவனை தொழுது கொள்ளும் போது வாயிலும் உதடுகளிலும் மாத்திரம் அல்ல நம்முடைய இருதயம் தேவனை கிட்டி சேர வேண்டும்
புதிய ஏற்பாட்டில் பாடலை பற்றி தேவனுடைய கட்டளை என்ன?
நாம் தேவனை துதித்து பாடல் பாடுகிறோம் என்றால் எங்கிருந்து பாட வேண்டும் எப்படி பாட வேண்டும்?
1Co14:15 இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
நாம் ஜெபிக்கும் போது கூட கருத்தோடு ஜெபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது
ஜெபத்தில் என்ன இருக்க வேண்டும்?
1)தேவன் செய்த சகல காரியங்களுக்கும் நன்றி சொல்லி ஸ்தோத்தரிக்க வேண்டும்
2)விண்ணப்பம் இருக்க வேண்டும்
3)வேண்டுதல் இருக்க வேண்டும்
சபை கூடி வரும் எல்லாருக்காகவும் ஒருவர் ஜெபிக்கிறார் அப்போது ஜெபிக்கிறவர் எதற்காக ஜெபிக்கிறார் என்று கவனிக்காமல் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லுவதினாலே என்ன நன்மை இருக்கிறது?
அவர் ஜெபித்து முடித்தவுடன் எதற்காக ஜெபித்தார் என்று தெரியாமல் ஆமென் என்று சொல்லும்போது நாம் பொய் சொல்லுகிறவர்களாய் இருப்போம் அல்லவா?
நான் ஆவியோடும் பாடுவேன் என்றால் பரிசுத்த ஆவியினால் நிறைந்து பாட வேண்டும் என்று அநேகர் சொல்லுகிறார்கள்
மேலே சொல்லப்பட்டது வேத வாக்கியத்தின் சத்தியமா ?
ஒரு கிறிஸ்தவனிடத்தில் எல்லாமே பரிசுத்த ஆவியானவரே வழி நடத்துவார் என்றால் அவன் நியாயத்தீர்ப்பின் நாளிலே யாருடைய கிரியை கொண்டு நியாந்தீர்க்கப்படுவான்
1) அவனுடைய கிரியைகளை கொண்டு நியாயந்தீர்க்கப்படுவானா?
2) அல்லது அவனை நடத்தின பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைக் கொண்டு நியாயத்தீர்க்கப்படுவானா?
அவனிடத்தில் பரிசுத்த ஆவியானவர் தான் அவனை சகல காரியத்திலும் வழி நடத்தியிருப்பார் என்றால் அவனுக்கு நித்தியதில் என்ன பலன் கிடைக்கும்?
சகலத்திலும் அவனை பரிசுத்த ஆவியானவர் வழி நடத்தி இருப்பார் என்றால் எதற்கு நியாயத்தீர்ப்பின் நாள் என்று ஒன்று ஏன் இருக்கிறது?
அப்படி நடத்துவார் என்றால் எல்லாருமே நேராக பரலோகம் போய் விடலாமே?
கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் நாளில் ஒரு கிறிஸ்தவன் பரிசுத்த ஆவியானவர் சரியாக என்னை வழி நடத்தவில்லை அதனால் தான் பாவம் செய்தேன் என்றால் அவனை எப்படி கிறிஸ்து நியாயந்தீர்ப்பார்?
மத் 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
வெளி 20:12மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
நமக்கு கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் உபதேசத்தில் இருந்து நாம் என்ன கிரியை செய்தோமோ அதைக் கொண்டு தான் நியாந்தீர்க்கப்படுவோம்
யோவா 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
அப்படி என்றால் ஆவியோடு பாடுவது என்பது என்ன?
உள்ளான மனுஷனில் ஒரு பாகமாய் இருக்கிற ஆவிக்குரிய இருதயத்திலிருந்து பாட வேண்டும்
நாம் தேவனை வாரத்தின் முதல் நாள் வரும் போது கீழே உள்ள காரியங்களைக் கொண்டு தான் அவரை தொழுது கொள்ளுகிறோம்
1)நாம் ஜெபிக்கும் போது இருதயத்தில் இருந்து தான் ஜெபிக்க வேண்டும்
2)பாடல் பாடும் போது இருதயத்தில் இருந்து தான் பாட வேண்டும்
3)தேவனுடைய சத்தியங்கள் பிரசங்கிக்கப்படும் போது இருதயத்தில் தான் விதைக்கப்பட்டு குத்தப்படுகிறது
4)கர்த்தருடைய பந்தியில் பங்கு பெரும் போது இருதயத்தில் சோதித்து அறிந்து தான் பங்கு பெற வேண்டும்
5)கர்த்தருக்கு வாரத்தின் முதல் நாளில் காணிக்கை செலுத்தும் போது இருதயத்தில் நியமித்தபடி தான் கொடுக்கிறோம்
நாம் பாடல் பாடும் போது இருதயத்தில் இருந்து கர்த்தரை பக்தியோடு பாட வேண்டும்
கருத்தோடு பாடுவேன் என்பது கிரேக்க பாஷையில் அறிவோடு அல்லது உணர்ந்து கொள்ளும்படி பாட வேண்டும் என்று இருக்கிறது
இன்றைக்கு பாடல் எழுதுகிறேன் என்று அநேகர் எழுதி பாடக்கூடிய பாடல்கள் எல்லாம் அறிவற்ற பாடலாகவும் அதின் மூலமாக தேவனுடைய எந்த சத்தியங்களை உணர்ந்து கொள்ள முடியாத பாடலாகவும் இருக்கிறது
அநேகருடைய பாடலின் வார்தைகளை காதுகளினால் கேட்க முடியாத படி அவ்வளவு அருவருப்பு நிறைந்ததாக இருக்கிறது
அநேக பாடல்கள் வாடா ஒரு கை பார்க்கலாம் என்ற ரீதியிலே பாடப்பட்டு இருக்கிறது
இப்படி செய்கிறவர்கள் பிசாசுகளின் உபதேசங்களுக்கு செவி கொடுத்து பிசாசுகளுக்கு ஆராதனை செய்கிறார்கள்
தேவனுடைய மகத்துவங்களையும் வல்லமையையும் அதிசயங்களையும் படுவோம் என்றால் அவர் யாரிடத்தில் என்ன மகத்துவங்களை செய்தரோ அதை குறித்து துதித்து பாட வேண்டும்
இஸ்ரவேலர்களுக்கு செய்த அற்புதங்களை இன்றைக்கும் தேவன் நமக்கு செய்வார் என்று பாடுகிறார்கள்
இன்றைக்கு எங்களுக்கு முன்பதாக செங்கடல் பிளக்கும் யோர்தான் வழி விடும் எரிகோ மதில் எங்கள் துதியினால் இடிந்து விழும் என்கிறார்கள்
கடல் பிளந்து வழி விடும் என்றால் அப்போஸ்தலனாகிய பவுல் ஏன் கப்பற்சேதத்தில் சிக்கிக் கொண்டு பிழைப்போம் என்கிற நம்பிக்கை அவருக்கு அற்றுப் போயிற்று?
அப் 27:18 மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள்.
அப் 27:19 மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.
அப் 27:20அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.
கிறிஸ்துவின் பிரமாணத்தில் சத்தியம் முற்றிலும் மாற்றப் பட்டு இருக்கிறது
மேலே சொல்லப் பட்ட காரியங்கள் இஸ்ரவேலர்களின் சரித்திரத்தில் ஒரே ஒரு முறை நடந்த சம்பவம் இனிமேல் இது போல் நடக்குமா?
மறுபடியும் இஸ்ரவேலர்கள் அப்படி செய்ய நினைத்து இருந்தாலும் அது ஒரு போதும் நடக்காத சம்பவம்
அந்த அதிசயங்களை எங்கள் தேவன் இஸ்ரவேலர்களுக்கு செய்தார் என்று அவரை மகிமைப் படுத்தி துதிக்க வேண்டுமே தவிர நாங்களும் செய்வோம் என்றால் அது புதிய ஏற்பாட்டு சத்தியமா அல்லது அது அறிவுள்ள பாடலா?
சங்கீத புஸ்தகங்களில் இருந்து வீணையோடும் சுரமண்டலத்தோடும் பாடுவேன் என்ற வேத வாக்கியங்களை எடுத்துக் கொண்டு நாங்களும் அப்படித்தான் பாடுவோம் என்பது எப்படி புதிய ஏற்பாட்டு சத்தியம் ஆகும்
ஒருவர் இப்படி பாடல் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்
பல்லுக்கு பல்லை உடைப்பேன்
கண்ணுக்கு கண்ணை குத்துவேன்
ஜீவனுக்கு ஜீவனை எடுப்பேன்
கைக்கு கையை எடுப்பேன் காலுக்கு காலை எடுப்பேன் பெற்றோர்க்கு கீழ்ப்படியாத பிள்ளையை கல்லை விட்டு எறிந்து கொன்று போடுவேன்
என்று ஒருவர் நியாயப்பிரமாணத்தின் உபதேசத்தை பாட்டு எழுதி பாடுவார் என்றால் நாமும் அவரோடு சேர்ந்து பாடுவோமா?
மேலே சொல்லப்பட்டதை குறித்து கிறிஸ்துவின் உபதேசம் என்ன சொல்லுகிறது?
மத் 5:38 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
மத் 5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.
நாம் பாடல் படுவோம் என்றால் தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டும் பழி வாங்குதல் தேவனுக்குரியது என்று தான் நாம் பாட வேண்டும்
பழைய ஏற்பாட்டில் இருந்து தேவனுடைய வல்லமைகளையும் அவர் செய்த அதிசயங்களையும் எடுத்துக்கொண்டு புதிய ஏற்பாட்டின் சத்தியங்களையும் ஆரோக்கியமான உபதேசங்களையும் எழுதி பாடல் மூலமாக பாடி அவரை தொழுது கொள்ள வேண்டும்
கர்த்தருக்கு சித்தமானால் ஆராதனைக்குரிய சகல சத்தியங்களையும் கற்றுக் கொள்வோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் எங்களோடு தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள அன்போடு அழைக்கிறோம்
written by
Ariyel Barnabas
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக