செவ்வாய், 10 செப்டம்பர், 2019

#451 - சர்ப்பம் ஏன் தந்திரம் உள்ளதாய் இருந்தது . ஆதி 3:1

#451 -  *சர்ப்பம் ஏன் தந்திரம் உள்ளதாய் இருந்தது . ஆதி. 3:1*

*பதில்* :
"கர்த்தராகிய ஆண்டவர் படைத்த எந்த மிருகத்தையும் விட அப்போது பாம்பு மிகவும் தந்திரமாக இருந்தது." என்று ஆதியாகமம் 3: 1-ல் நாம் கற்றுக்கொள்கிறோம்.

மற்ற மிருகங்களை போல சர்ப்பத்திற்கு காதுகள் இல்லாததினால் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கும் தன்மையால் இப்படி வேதம் குறிப்பிடுகிறதா என்ற தீர்க்கமான விளக்கம் இல்லை. (மத் 10:16)

ஏவாளைத் தூண்டுவதற்கு சாத்தானைப் பயன்படுத்த அனுமதிக்கலாமா என்பதைத் யோசிக்கும் அளவிற்கு சர்ப்பமானது புத்திசாலித்தனமாக இருந்ததா என்று வேதம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் நிச்சயமாக பாம்பை மீண்டும் அந்த முறையில் பயன்படுத்த சாத்தானால் முடியாது என்பது திண்ணம்.

*இன்னும் சில தகவல்களை இங்கே பகிர விரும்புகிறேன்*:
அப்.யோவான் பிசாசென்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பு என்று வெளி 20: 2ல் குறிப்பிடுகிறார்.

பாம்பு ஏவாளை வஞ்சித்தது என்று பவுல் கூறுகிறார் 2கொ 11: 3ல்.

இயேசுவோ சாத்தான் தான் கொலைகாரன் என்றார் - யோ 8:44.

சர்ப்பத்திற்கே பெயர் வைத்த ஆதாமையும் வஞ்சிக்க பிசாசு எடுத்து கொண்ட முயற்சியில் இருவரும் தோற்றுபோனார்கள். (ஆதி 2:19)

சர்ப்பத்தைக்காட்டிலும் மனிதர்களுக்கு அறிவை / அதிகாரத்தை தேவன் கூடுதலாக கொடுத்த போதிலும் தேவனுக்கு கீழ்படியாமையின் குணம் அவர்களை மேற்கொண்டுவிட்டது (ஆதி 1:28)

தேவனுடைய வார்த்தைக்கு மனிதன் கீழ்படியவேண்டும் என்பதால் அந்த கனியை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று சொன்ன மாத்திரத்திலேயே மனுஷன் தனிமையாய் இருப்பது சரியல்ல என்று மனுஷி படைக்கப்பட்டாள் (ஆதி 2:17-18)

ஏவாளோ தேவனுடைய வார்த்தைக்கு மீறி சொல்லப்பட்ட ஒரு வார்த்தையை தன் கணவனிடத்தில் ஆலோசிக்காமல் / கேட்காமல்  தானாக எடுத்த முடிவினால் தானும் தன் வம்சமும் வஞ்சிக்கப்பட்டது மனைவிகளுக்கான பொிய பாடம்.

சர்ப்பமானது தன் செய்கையினால் கால்களை இழந்தது, மண்ணை ஆகாரமாக்கிக்கொண்டது (ஆதி 3:14).

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக