#452 - *பெண்கள் சபைகளின் ஆராதனையில் (பொது ஜெபம், பாடல்,
செய்தி, திருவிருந்து, காணிக்கை) எந்தெந்த பகுதிகளை தலைமை தாங்கி நடத்தலாம்? பெண்கள் சபைகளில் ஆராதனையின் போது என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபட வேதம்
அனுமதி அளித்துள்ளது? பெண்கள் ஆராதனையின் போது தீர்க்கதரிசனம் சொல்ல அனுமதி உள்ளதா? வேதத்தின் படி விளக்கம் தாருங்கள் சகோதரரே
*பதில்*
:
ஆராதனை
/ தொழுகை என்பது ஆண் பெண் இருபாலரும் கூடி இருக்கும் இடம்.
ஆண்கள்
முன்னிலையில் பெண்கள் தலைமை எடுக்கவோ போதிக்கவோ பிரசங்கம் செய்யவோ வேதம் அனுமதியளிக்கவில்லை
(1கொரி.
14:34, 35, 11:9, எபே. 5:24)
எழுதப்பட்டிருக்கும்
வேத வசனங்களை வாசிப்பதில் ஆண்கள் மீது அதிகாரம் செலுத்துவதாக கருதமுடியாது.
1கொரி. 14ம் அதிகாரம் தொழுகை நேரத்தை குறித்தும் 1தீமோ. 2:11-15 வாழ்க்கையை
குறித்தும் பேசப்படுகிறது.
இரண்டு பத்திகளிலும் "அமைதலாயிருக்க வேண்டும்"
என்ற சொல் பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.
ஏனெனில் தனித்துவமான கிரேக்க சொற்கள்
பயன்படுத்தப்படுகின்றன. I
கொரிந்தியர் 14: 34 ல்,
"அமைதியாக" என்பது கிரேக்க வார்த்தையான சிகடோசன்
என்பதிலிருந்து வந்தது.
இதன் பொருள் அமைதியாக இருங்கள், சும்மா
இருங்கள், ஒன்றும்
சொல்லாதீர்கள், பேசுவதை
நிறுத்துங்கள் அல்லது ஒருவரின் அமைதியைப் பெறுங்கள் என்பதாகும்.
அப்.பவுல் – பெண்கள் பேச அனுமதிக்கவில்லை என்றும்
பெண்கள் சபையில்
பேசுவது வெட்கக்கேடானது என்றும் வரையறுக்கிறார்.
மொழிபெயர்ப்பாளர் இல்லாவிட்டால் பேசாமல் இருக்க
வேண்டும் (1கொரி
14:28) என்று அந்நிய
மொழிகளில் பேசுவோரைச் குறித்து சொல்லப்பட்ட அதே
வார்த்தை I கொரிந்தியர்
14: 28-ல் பயன்படுத்தப்படுகிறது.
வேறொரு தீர்க்கதரிசி பேசும்போது அவர்கள் அமைதியாக இருக்க
வேண்டும் என்று தீர்க்கதரிசிகளுக்கான அறிவுறுத்தலிலும் I கொரிந்தியர் 14:30-ல் இது காணப்படுகிறது.
இது எல்லா ஒலிகளுக்கும் முழுமையான தடை அல்ல, ஏனென்றால் தொழுகையில் பாட
வேண்டும் ஆமேன்
சொல்லவேண்டுமே (எபேசியர் 5:19;
கொலோசெயர் 3:16).
1
தீமோத்தேயு 2: 11-12-ல் ஹுசுச்சியா என்ற
கிரேக்க வார்த்தைக்கு
தமிழில் "அமைதலாக
அல்லது ஓய்வு அல்லது சமாதானம்”
என்று பொருள்படுகிறது.
அப்போஸ்தலர் 22: 2 மற்றும் 2 தெச. 3:12லும் இதே வார்த்தை
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆகவே
ஒரு ஆணுக்கு கற்பிக்கவோ அல்லது ஆணின் மீது அதிகாரம் செலுத்தவோ
அனுமதிக்கப்படவில்லை என்று கூறி ஒரு வரையறையை அளிக்கிறார்.
பாடல்
பாடுவதோ எழுதப்பட்டிருக்கும் வேத வசனங்களை வேதத்திலிருந்து வாசிப்பதிலோ ஆண்கள்
மீது அதிகாரம் செலுத்துவதாக இல்லாததாகையால் தொழுகையின் போது இந்த இரண்டிற்கும் தடையில்லை
என்றே மேலே உள்ளவற்றிலிருந்து நாம் அறியமுடிகிறது. சில வேத வல்லுனர்கள் வேதம் கூட வாசிக்கக் கூடாதென்று
வாதிடுபவர்களும் உண்டு.
தீர்க்கதரிசனம்
என்பது தேவனுடைய சித்தமான பின் வரும் காரியங்களை சொல்வது, வேதத்தை கற்றுக்கொடுக்கும்படி
பேசுவது போன்றவையாகும்
(1கொரி. 14:31, எபே.
4:11-13).
நம்
கையில் இருப்பது தீர்க்கதரிசன வார்த்தையான வேதாகமம். நம் வாழ்க்கையின் பிற்கால
அனைத்து தேவைகளையும் தேவன் நமக்கு எழுதிவைத்து பூரணப்படுத்தியுள்ளார் (2தீமோ. 3:16, யோ. 20:31)
இதையல்லாமல்
வேறே சில காரியத்தை தேவன் வெளிப்படுத்தினார் என்று யார் சொன்னாலும் அது வேதத்திற்கு
புறம்பானவையே (1கொரி. 4:6). ஆகவே தீர்க்கதரிசனம் என்ற பெயரிலும் ஆண்கள் மத்தியில்
பேச பெண்களுக்கு இடமில்லை.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக