செவ்வாய், 10 செப்டம்பர், 2019

#450 - ஏன் யெப்தாவின் மகளை வெளியே தேவன் வரச் செய்தார்?

#450 - *ஏன் யெப்தாவின் மகளை வெளியே தேவன் வரச் செய்தார்?*

*பதில்* :
யெப்தாவின் மகள் ஏன் வெளியே வந்தாள் என்று நமக்கு வேதம் சொல்லவில்லை. ஆனால் அதை காட்டிலும் அவளை குறித்தும் அவள் தகப்பனின் செயலையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் உள்ளது.

யுத்தத்திற்கு செல்வதற்கு முன், யெப்தாவின் பொருத்தனை அவர் யுத்தத்தில் வெற்றிகரமாக திரும்பினால் அவரது வீட்டிலிருந்து தனக்கு எதிர் கொண்டு வருவது கர்த்தருடையது என்றும் அதை தகனபலியாக செலுத்துவேன் என்றான் (நியா. 11:30-31).

எந்த பொருத்தனையும் தேவனுடைய சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்  (லேவி. 20: 1-5, எரே. 7: 31-32)

அறியாமல் / சரியாக யோசிக்காமல் தீர்க்கமாக சிந்திக்காமல் வாக்குறுதியளித்ததின் பலனை இப்போது யுத்தத்தில் வெற்றிகண்டு வீடு திரும்பும் போது யெப்தா பெற்றுக்கொள்கிறார் !!  ஆம்... தன்னுடைய மகளே இவருக்கு எதிர் கொண்டு வருகிறாள் (நியா. 11:35).

*பொருத்தனைக்கான சிறப்பு விதிகள்*
சமாதானப் பலி, போஜன பலி, தகன பலி ஆகியவை தேவனுக்கு பொருத்தனையாக செய்யப்படலாம்.

பொருத்தனை நிறைவேறியதும், பலி செய்ய வேண்டியது (உபாகமம் 23: 21-23; பிரசங்கி 5: 1-4).

தனக்கு சொந்தமான எதையும் தேவனுக்கென்று பொருத்தனை செய்யலாம். பிள்ளைகள்/ஜனங்கள் (லேவியராகமம் 27: 2-8), மிருகங்கள்  (லேவியராகமம் 27: 9-13), வீடுகள் (லேவியராகமம் 27: 14-15), அல்லது சொத்து (லேவியராகமம் 27: 16-25).

பெரும்பாலான உறுதிமொழிப் பலிகளை மீட்டெடுக்கலாம் அல்லது திரும்ப வாங்கலாம். மேலும் லேவி. 27 ல் பெரும்பாலானவை மீட்பின் விலையை எவ்வாறு தீர்மானிப்பது என்பது குறித்து விவாதிக்கின்றன.

இருப்பினும், பலியிடப்படும் விலங்குகள் (லேவியராகமம் 27: 9-10), தலைச்சன் (ஏற்கனவே கர்த்தருக்கு சொந்தமானவை) சுத்தமான விலங்குகள் (லேவியராகமம் 27:26), அல்லது அழிவிற்காக ஒதுக்கி வைக்கும் எதையும், மனிதனாக இருந்தாலும் சரி, விலங்கு, அல்லது நிலம்/சொத்து (லேவியராகமம் 27:28) ஆகியவற்றை மீட்டெடுக்க முடியாது.

சாபத்தீடாக ஒதுக்கி வைத்த எவரையும் அவர்கள் மரண தண்டனையின் கீழ் இருப்பதால் மீட்க முடியாது (லேவியராகமம் 27:29).

தலைச்சன் / முதற்பேறான பிள்ளைகள் ஏற்கெனவே கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதால் அவர்கள் மீது பொருத்தனை செய்தால் அவர்களையும் மீட்க முடியாது (யாத்திராகமம் 13: 2, 12-15). மேலும், ஒரு முறை பொருத்தனை செய்து மீட்டெடுக்கப்பட்டவற்றை, இரண்டாவது முறையாக பொருத்தனை செய்தால் அதையும் மீட்டெடுக்க முடியாது.

தகனபலியாக செய்யப்பட்ட எதுவும் முற்றிலுமான அழிவுக்கு பொருத்தனை செய்யப்படுகிறது. அதை மீட்டெடுக்க முடியாது.

அழிவுக்காக (தகன பலியாக) பொருத்தனை செய்யப்படும் சொத்துக்களை, எந்த நோக்கத்திற்காகவோ மீட்கப்படுவதற்கு முன்பே அதை விற்றுவிட்டாலும் அந்த தொகை, ஆசாரியர்களின் சொத்தாக மாறுகிறது (லேவியராகமம் 27: 20-21).

அதன் படி லேவியரின் முதல் மகனாகிய சாமுவேல் (I நாளாகமம் 6:16, 28) கர்த்தருக்குச் ஊழியம் செய்ய வந்தார் (I சாமுவேல் 3:1).

தனக்கு ஒரு குழந்தை வழங்கப்பட்டால், அந்தக் குழந்தை கர்த்தருக்குக் கொடுக்கப்படும் என்று அவருடைய தாய் பொருத்தனை செய்திருந்தார் (I சாமுவேல் 1:11).

லேவி. 27ன்படி பொருத்தனை செய்த குழந்தைகளை மீட்க அனுமதித்தாலும், முதல் குழந்தை ஏற்கனவே கடவுளுக்கு சொந்தமானதாகையால் மீட்க முடியாது.

*அப்படியானால் யெப்தாவின் மகளுக்கு நடந்தது என்ன?*
வெற்றிகரமான போரிலிருந்து யெப்தா திரும்பியபோது, ​​அவரது வீட்டிலிருந்து அவரை வாழ்த்திய முதல் நபர் அவரது ஒரே மகள்.

அவள் அவனுடைய முதல் மகள் என்பதால் அவனால் அவளை மீட்க முடியாது.

தகனபலியாக (அழிவுக்காக) அவர் பொருத்தனை செய்ததால், அவளை மீட்க முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், அவள் கர்த்தருக்கு மிகவும் பரிசுத்தவானாகவும் குறிக்கப்பட்டாள் (லேவியராகமம் 27:28).

யெப்தாவின் பொருத்தனையின் மூலம் தனது மகளை வாழ்நாள் முழுவதும் கன்னியாக இருக்க வேண்டும் என்பதை யெப்தா மற்றும் அவரது மகள் இருவரும் உணர்ந்தனர். யெப்தாவைப் பொறுத்தவரை, அவருடைய பரம்பரையின் முடிவைக் குறிக்கிறது.

அவரது மகள் தனது தந்தையின் பொருத்தனையை கடைப்பிடிக்க ஊக்குவித்தார். அவள் கன்னித்தன்மையைப் குறித்து புலம்புவதற்கு இரண்டு மாதங்கள் கேட்டாள் (நியா. 11:38).

வாழ்க்கை முடிவை குறித்து அல்ல கன்னித்தன்மையை குறித்து என்பதைக் நாம் கவனிக்க வேண்டும்.

மேலும், இந்த இரண்டு மாத காலம் கழித்து தன் மகள் வந்த போது யெப்தா தனது பொருத்தனையை நிறைவேற்றினார் என்றும் தொடர்ந்து ​​அவள் எந்த புருஷனை அறியாதிருந்தாள் என்றும் சொல்லப்படுகிறது !! நியா. 11:39.

தந்தையின் பொருத்தனையின் காரணமாக அவள் பலியிடப்பட்டுவிட்டதாக எந்த குறிப்பும் இல்லை.

நியா. 11:40வது வசனத்தில் - வருஷத்தில் 4 நாட்கள் யெப்தாவின் மகளை இஸ்ரவேல் குமாரத்திகள் போய் பார்த்து அவளுக்கு ஆறுதலோ தேறுதலோ அவள் செய்கையை போற்றவோ இப்படிப்பட்ட பழக்கம் இருந்தது என்றும் அறிகிறோம்.  “த்தாவ்னா” என்ற எபிரேய வார்த்தைக்கு – செய்த செயலுக்காக கொண்டாட்டுவது அல்லது புலம்பல் என்று அர்த்தம். தேவ விருப்பத்தை மீறின ஒரு செயல் அங்கு நிறைவேற்றப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட செயலை இவ்வாறு நினைவு கூறுவார்களா?

இந்த பகுதியை ஒரு சாரார் – யெப்தா தன் மகளை பலிகொடுத்தார் என்று வலியுறுத்துவதும் உண்டு. 

பலிகொடுத்தார் என்பதை குறிப்பதைக் காட்டிலும் பலியிடாமல் தேவனுக்கு முழுமையான சேவைசெய்யும்படி ஒப்புக்கொடுத்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதை அதிகமான வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

யெப்தா தனது பொருத்தனையை நிறைவேற்றினார் (11:39).
அவர் அவளைக் கொன்றார் என்று அர்த்தம் எடுத்துக்கொள்வதென்றால் இந்த வசனத்தின் இறுதியில் அவள் புருஷனை அறியாதிருந்தாள் என்று சொல்லவேண்டிய அவசியம் எதற்கு?

எப்படியாயினும் ஜெப்தாவின் மகள் தேவபக்தியானவளாக இருந்திருக்கிறார்.

ஒரு மரியாதைக்குரிய வேத அறிஞர், கோஸ்லிங்கா, யெப்தா உண்மையில் தனது மகளை கொன்றார் என்று வாதிடுகிறார் மேலும் "நிரந்தர கன்னி" என்பதும் சாத்தியம் என்றும் ஒப்புக்கொள்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு யெப்தா, நியாயதிபதியாக தொடர்ந்தார் என்பது இந்த கருத்துக்கு சாதகமானது என்றும் அவர் கூறுகிறார்.

உண்மையில், மோசேயின் சட்டம் தனது பிள்ளைகளில் ஒருவரை மோளேக்கிற்கு பலியிட்ட எவருக்கும் மரண தண்டனை விதித்தது (லேவியராகமம் 20:2).

யெப்தா தன் மகளை - கர்த்தருக்குக் தியாகம் செய்திருந்தால் - அந்தக் கொடுமைக்கு எதிராக எத்தனை இஸ்ரவேலர்கள் கடுமையாக நடந்துகொண்டிருக்க மாட்டார்கள் என்பதைப் பார்ப்பது கடினம்.

வேத அறிஞர் கோஸ்லிங்கா கூறுகையில், இந்த கருத்தை புரிந்து கொண்டு பிரசங்கிக்கிறவர்கள் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதைக் காட்டிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்.

இந்த சம்பவத்தை ஒருவர் எந்த பார்வையில் எடுத்துக் கொண்டாலும், வேதத்தின்படி தார்மீக குற்றவாளியாகக் குற்றம் சாட்ட வேண்டிய அவசியமில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
 
சில ஆய்வுக் கருத்துக்கள் – வெய்ன் ஜாக்சன் வலைதளத்திலிருந்தும் சேர்க்கப்பட்டுள்ளது.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக