வெள்ளி, 6 செப்டம்பர், 2019

#428 - இன்றைய நாட்களில் சபைகளில் திருநங்கைகள் சபை நடத்துகிறார்களே இது சரியானதா?

#428 - *இன்றைய நாட்களில் சபைகளில் திருநங்கைகள்  சபை நடத்துகிறார்களே இது சரியானதா? அநேகர் பாஸ்டராகவும் ரெவரென்டாகவும் இருக்கிறார்கள். வேதத்தின்படி விளக்குங்கள் சகோதரரே*

*பதில்* :
ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தால் அது எப்படி உண்மை என்று மக்கள் நம்ப ஆரம்பித்து விடுகிறார்களோ அது போல அடிப்படையான சில விஷயத்தை இக்கால கிறிஸ்தவம் பல அடிப்படையானவற்றை தன் உட்கட்டமைப்பில் மறந்து விடுகிறது.

தேவனுடைய வீட்டில் நடக்கவேண்டிய வகையை திட்டமும் தெளிவுமாக நிரூபங்கள் போதித்திருக்க – அவைகளை ஒதுக்கி சொந்த பாணியிலேயே செய்பவர்களுக்கு எல்லாம் சம்மதமே !!

பாஸ்டர் என்றால் மூப்பர் (அப். 20:17, 28)

பாஸ்டர் எனப்படுபவர் வயதில் மூத்தவராக இருத்தல் அவசியம். (தீத்து 1:6)

ஒரே மனைவியையுடைய *புருஷனாக* இருத்தல் அவசியம். (தீத்து 1:6)

விசுவாசமுள்ள *பிள்ளைகள் அவருக்கு இருத்தல் அவசியம்*. (தீத்து 1:6)

இன்னும் இப்படி அதிகமான தகுதிகள் தேவைபடுகிறது (தீத்து 1:5-11, 1தீமோ. 3:1-7)

அடிப்படையான வேத அறிவு கூட இல்லாமல், எந்த கேள்வியை கேட்டாலும் வேதத்தின்படி பதில் சொல்ல தொியாமல், மாதங்களில் / வருடங்களில் கிடைக்கும் கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் மூலம் சில பாடங்களின் பதில்களை எழுதிவிட்டு D.Th, B.Th, M.Th, BD போன்ற பட்டத்தை வாங்கி போட்டுக்கொண்டு திடீரென்று தங்களை பாஸ்டராக வருபவரிடமிருந்து விலகியிருத்தல் ஆரோக்கியமான விசுவாசிக்கு அவசியம். (1தீமோ. 3:6)

போதகர் *ஆண்களாக* இருக்க வேண்டும். 1தீமோ. 3:2

ஆண்கள் மத்தியில் பெண்கள் பிரசங்கிக்க வேதம் அனுமதி தரவில்லை (1கொரி. 14:35)

அப்படியிருக்கும் போது தங்களை பெண்களாக பாவித்துக்கொள்ளும் எந்த திருநங்கையரும் மேடையிலோ சபையிலோ ஆண்கள் முன்னிலையில் பிரசங்கிக்க வேதத்தில் அனுமதியில்லை.

Yaw-ray என்று எபிரேய வார்த்தைக்கு *ரெவரென்டு* என்று ஆங்கிலத்திலும் தமிழில் *பயங்கரமானவர்* என்றும் அர்த்தம். அந்த வார்த்தை தேவனுக்குரிய நாமம் !!! (சங். 111:9)  --  எந்த மனிதனும் அந்த நாமத்தை தரித்துக்கொள்ள இடமில்லை !!

பதவிக்கும் பெயர் புகழுக்கும் ஆசைப்பட்டு தன்னை பெருமைபடுத்திக்கொள்ளாமல் வேதத்தின்படி *சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும்* (மத். 23:8)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +918144776229    
 
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக