வெள்ளி, 6 செப்டம்பர், 2019

#427 - பிலேயாம் போதனை என்ன? வெளி. 2:14ன்படி எந்த வசனத்தில் செய்கிறார்?

#427 - *பிலேயாம் போதனை என்ன? வெளி. 2:14ன்படி எந்த வசனத்தில் செய்கிறார்?*

வெளிப்படுத்தின விசேஷம் 2:14  ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு, விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

இந்த போதனையை பிலேயாம் எந்த வசனத்தில் செய்கிறார். சகோதரரே இதனை விளக்கி தாருங்களேன்

*பதில்* :
எப்போது எந்த வகையில் பாலாக்கிடம் பிலேயாம் சொன்னார் என்ற தகவலை குறிப்பாக காண முடிவதில்லை. ஆனால் என்ன சொன்னார் என்றும் அதன் விளைவு என்ன என்பதையும் நீங்கள் குறிப்பிட்ட வெளி. 2:14ல் காண முடிகிறது. மேலும் சில வசனங்கள் மூலம் நாம் இன்னும் குறிப்பாக அதை ஊர்ஜீதப்படுத்திக்ககொள்ள முடிகிறது.

அவைகள் :
எண். 31:16 பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.

யூதா 1:11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

2பேதுரு 2:15-16 செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம். கடிந்து கொள்ளப்பட்டான்;

மீகா 6:5 என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனாகிய பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக