வெள்ளி, 6 செப்டம்பர், 2019

#426 - பணக்கஷ்டம் மனக்கஷ்டம் இரண்டும் வரும்போது இயேசுவின் அன்பு ஏன் மறுக்கப்பட்டு போகின்றது?

#426 - *பணக்கஷ்டம் மனக்கஷ்டம் இரண்டும் வரும்போது இயேசுவின் அன்பு ஏன் மறுக்கப்பட்டு போகின்றது?*

ரோ 4:19-21ஐ படிக்கும் போது ஆபிரகாமின் விசுவாசம் நம்மை வெட்கப்படுத்துகிறது. ஒன்றுமே இல்லாத சூழலில் இவரால் இவ்வளவு விசுவாசமாக இருக்க எப்படி முடந்தது. இவ்வளவு விடயங்களை கொடுத்தும் நம்மால் ஏன் விசுவாசிக்க முடியலை...?

*பதில்* :
மிக சரியாக சொன்னீர்கள்.

அதனால் தான் அவர் *விசுவாசத்தின் தகப்பன்* ஆனார்.

*ஆகவே தான் ஆகூர் சொன்னார்*:
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும். (நீதி 30:9)

தற்போது :
கல்வி வந்தது
அறிவு பெருத்தது
வசதி கூடியது
உபகரணங்கள் கூடியது
விஞ்ஞானம் கூடியது
சுயநலம் கூடியது

ஆகவே எதில் குறைவு வந்தாலும் தானாகவே மனிதன் அதை அடைய முற்படுகிறான். சகலவற்றிலும் தோற்றதும், மருத்துவரும் கைவிரிக்கும் போது தான் கடவுள் ஞாபகம் கடைசியில் வருகிறது.

ஆனால் எல்லா அதிகாரமும் மகத்துவமும் நம் பரம பிதாவின் கையில் தான் இருக்கிறது என்று அறிந்தால் எவ்வளவு துன்பம் வந்தாலும் நெருக்கடிகள் வந்தாலும் வியாதிகள் வந்தாலும் தோல்விகள் வந்தாலும் சகலவற்றையும் தேவன் அனுமதி இல்லாமல் நமக்கு நடக்காது என்பதை நாம் அறிந்திருந்தால் முதலாவது அவரையே பற்றிக்கொள்வோம். (யோபு 5:17, ஏசா 45:7)

அறியாமையே விசுவாச குறைவு.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக