வியாழன், 5 செப்டம்பர், 2019

#425 - குழந்தைகள், ஸ்திரீகள்,பிள்ளைகள் என்று அனைவரையும் கொல்ல சொல்பவர் எப்படி கடவுளாக இருக்க ‌முடியும்?

#425 - *குழந்தைகள், ஸ்திரீகள்,பிள்ளைகள் என்று அனைவரையும் கொல்ல சொல்பவர் எப்படி கடவுளாக இருக்க ‌முடியும் என்று மாற்று மத சகோதரர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்...எப்படி பதில் கொடுப்பது ஐயா*

*இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.* 1சாமுவேல் 15:3

*பதில்* :
இந்த வசனத்திற்கான பதிவை படிக்கும் ஒவ்வொறுவருக்கும் தேவனைப் பற்றிய பயம் உண்டாகும் என்றே நம்புகிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட 3ம் வசனத்திற்கு முந்தய வசனம் இவ்வாறு சொல்கிறது:
1சாமு 15:2 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை *மனதிலே வைத்திருக்கிறேன்*.

ஆம்.... தேவனுக்கு எதிராய் செயல்பட்டவர்கள் நிச்சயம் அதற்கேற்ற தண்டனையை பெறுவார்கள்.

இந்த சம்பவம் சுமார் 400 வருடங்களுக்கு முன்பதாக நடந்தேறியது !!
யாத் 17:8-16

இராஜாவாக சவுல் அபிஷேகம் பண்ணப்பட்டதும் தேவன் அவன் மூலமாக செய்விக்கும் முதல் வேலை !! (1சாமு 15:1)

இந்த 3ம் வசனத்தில் சொன்னபடியே அச்சு அசலாக செய்யாமல் விட்டதன் பலனாக சவுல் தன் இராஜ்ஜிய பாரத்தையே இழந்து போனான் (1சாமு 15:9, 15, 21-23)

தேவன் இரக்கமுள்ளவர் தான் ஆனால் அவர் உன்னதமானவர், சர்வ வல்லமையுள்ளவர், பரிசுத்தமுள்ளவர், பயப்படத்தக்கவர். அவருக்கு முன்பாக நாம் பயத்தோடும் நடுக்கத்தோடும் இல்லாமல் அஜாக்கிரதையாக தங்கள் இஷ்டத்திற்கு ஆடிக்கொண்டு இருப்பவர்கள் தங்கள் ஜீவனுள்ள போதே மனந்திரும்பவேண்டும் என்று கண்ணீரோடு எழுதுகிறேன் (எபி 12:28)

அவர் சொல்லை அப்படியே கீழ்படிய வேண்டியது நம் கடமை. மீறினால தண்டனைக்கு எப்படி தப்பிப்போம் (எபி 2:4)

சும்மா இருந்தவர்களை கொலை செய்ய சொல்லவில்லை அவர்.
தேவ ஜனத்திற்கு எதிராக வந்த அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தண்டனை. அதே வேளையில் தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்படியாத இராஜாவாகிய சவுலுக்கும் தண்டனையாவே அது அமைந்தது.

புதிய ஏற்பாட்டு காலத்தில் தேவனுடைய ஆராதனையில் / தொழுகையில் தேவன் கட்டளையிடாத / அங்கீகரிக்காத / சொல்லாத எத்தனையோ காரியங்களை உட்புகுத்தி தங்களுக்கு இஷ்டமானதை பாகால் ஜனங்களை போல செய்து தங்களை பக்தியாளனாக காண்பிப்பவர்கள் மனந்திரும்ப வேண்டும்.

இன்றும் காலம் இருக்கிறதே !!
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக