வியாழன், 5 செப்டம்பர், 2019

#424 - ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். விளக்கவும்

#424 - *ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். எண்ணாகமம் 31:17 - இந்த வசனத்தை கொஞ்சம் விளக்குகள் ‌ஐயா*

*பதில்* :
பிலேயாம் சொல்வதெல்லாம் பலிக்கிறது என்பதை அறிந்த பாலாக், பிலேயாமை வரவழைத்து இஸ்ரவேலை சபித்தால் இஸ்ரவேலை வீழ்த்தி விடலாம் என்று எண்ணினான் பாலாக் (எண். 22:6)

பாலாக்கின் வெகுமதிகளை பிலேயாம் இச்சித்தாலும் வெளியரங்கமாக கர்த்தரின் வாக்கை மாற்றி சொல்லமுடியாமல் தவித்தான் (எண். 22:17-19)

ஆனாலும் பிலேயாம், பாலாக்குக்கு மறைமுகமாக ஆலோசனை கொடுத்து இஸ்ரவேல் ஜனம் தன் தேவனின் கோபத்தை தானாக சம்பாதித்துக்கொள்ளும் யுக்தியை சொல்லிக்கொடுத்தான் (எண். 24:14-24, வெளி. 2:14)

*பிலேயாமின் போதனை* : “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகம் (வெளி. 2:14)

அவ்வாறே நடந்தது. இஸ்ரவேலர் வேசித்தனம் பண்ணினார்கள் (எண். 25:1)

தேவன் கோபமூண்டு மீதியானியரை அழிக்கசொன்னார் (எண். 31:2)

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு ...
தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து, சிறைப்பிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும், … மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். (எண். 31:9-12)

*அந்த கூட்டத்தை பார்த்தபோது மோசே சொன்னார்* :
ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? ... பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே. *ஆகையால்* குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.  (எண். 31:14-17)

அதாவது ஆண்களோடு சம்யோகம் செய்த ஸ்திரீகள் என்றால் நிச்சயம் அந்த ஸ்திரீகள் இஸ்ரவேல் தேவ கோபத்தை சம்பாதித்ததற்கு அவர்கள் காரணமானவராகையால் அவர்களை கொண்று போடசொன்னார். (எண். 31:16-17) 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக