திங்கள், 2 செப்டம்பர், 2019

#411 - மதம் மாறுவது நம்பிக்கையா?

#411 - *மதம் மாறுவது நம்பிக்கையா? மதம் எப்படி உருவானது?* மனமாற்றம் மதமாற்றம் வேறு பிரித்து விளக்கவும்

*பதில்* :
மதம் நிச்சயமாக மாற வேண்டும்.
அப்போது தான் வாழ்க்கை சமாதானமாக இருக்கும். 

மதம் என்ற வார்த்தையின் அர்த்தம் *“வெறி”* என்பது.
ஆகவே, வெறியோடு வாழ்ந்தால் சமாதானம் இருக்காது.

பொதுவாக இந்து மதம், பொளத்த மதம், கிறிஸ்தவ மதம் என்று சொல்லி பழகிவிட்டார்கள்.

*கிறிஸ்தவத்தை தவிர மற்றவைகளை சொல்ல எனக்கு எந்த உரிமையும் கிடையாது*.

கிறிஸ்தவம் ”மதம்” அல்ல.
பரலோகத்திற்கு போவது எப்படி என்ற “வழியை” சொல்லிக்கொடுக்கும் மார்க்கம் அது. 
 
வழி என்ற தமிழ் வார்த்தைக்கு மார்க்கம் என்ற சொல்லும் உள்ளது !!

கிறிஸ்தவ மதம் என்பது தவறான வார்த்தை.
கிறிஸ்தவ மார்க்கம் என்பதே சரியான வார்த்தை.

கிறிஸ்து சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த பிறகு 50ம் நாள் பண்டிகையன்று கிறிஸ்தவம் ஸ்தாபிக்கப்பட்டது.  (அப். 2)

அதற்கு முன்னதாக யூதர்கள் மோசேயின் கட்டளையின் வழியாய் தேவனை தொழுது கொண்டு வந்தார்கள்.

சிலுவைக்கு பின் மோசேயின் பிரமாணம் அல்ல கிறிஸ்துவின் பிரமானமே யூதர் உட்பட அனைவருக்கும் பொருந்தும். . (எரே. 31:31, ரோ. 10:4)
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக