#410 *கேள்வி* எபேசியர் 1: 13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின்
சுவிசேஷமாகிய *சத்தியவசனத்தைக் கேட்டு,
விசுவாசிகளானபோது*
வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள்
முத்திரைபோடப்பட்டீர்கள்.
இந்த வார்த்தை பேசப்படும்போது
முழு பைபிள் இல்லை. முதலாம்
நூற்றாண்டு பிறகுதான் வந்தது.
பின் எதைகேட்டு விசுவாசிகளானார்கள்.
இப்போது நம் கையில் இருப்பது என்ன வேதம் ? சத்திய வேதமா ,
பரிசுத்த வேதமா , தள்ளப்பட்ட வேதமா ?
விளக்கம் தரவும்.
*பதில்*
:
1714ல் தமிழ் வேதாகமம் புத்தக வடிவில் முதன் முதலில் வெளி வந்தது.
சுமார்
1500ம் ஆண்டுகளில் முதல் கிரேக்க செப்ட்யூஜன்ட் என்ற வேதாகமம் வெளிவந்தது.
மற்ற
அப்போஸ்தலர்கள் எழுதிய நிருபங்களை ஆதி சபையினர் ஒவ்வொரு சபையாக வாசித்து
மற்றவருக்கு அனுப்பியே தேவ வார்தையில் வளர்ந்தனர் (கொலோ. 4:16, 1 தெச. 5:27, 1கொரி. 16:3, 1பேதுரு 5:12,
2பேதுரு 3:2, 2தெச. 3:17, 2கொரி. 10:11, 2கொரி. 3:1, 2கொரி. 1:1, 2தீமோ. 4:13, அப். 8:38)
ஆகவே
தான் அவர்களுக்கு நினைப்பூட்டும்படியான ஆவியானவர் தேவைப்பட்டது (யோ. 14:26)
70வது
கிபி யில் எருசலேம் நகரம் முற்றிலும் அழிக்கபட்டது. அதை தொடர்ந்து இப்படிப்பட்ட
அநேக சுருள்களை கி.பி 70லிருந்து 150கி.பி இடைப்பட்ட காலங்களில் சவக்கடல் மற்றும்
பல இடங்களில் கண்டெடுத்து அவை அணைத்தையும் சரிபார்த்து, அதன் உண்மை தன்மையை சோதித்து
– அப்போஸ்தலர்கள்
எழுதியதை வேறு பிரித்து இப்படி மிக மிக சிரத்தையோடு தற்போது முழுமையான ஆதியாகமம்
துவங்கி வெளிபடுத்தல் வரை கிரமமாக சேர்க்கப்பட்டு சுலபமாக நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு
உன்னதமான காரியத்திற்கு கீழ்படியாமல் தங்கள் தங்கள் போக்கில் அவரவர் இந்த வசனங்களை
வளைத்து கொண்டிருந்தால் நியாயதீர்ப்புக்கு எப்படி தப்புவது? தேவன் தம் வார்த்தைகளை
அணைவருக்கும் கொண்டு சேர்க்கும் காரியத்தில் நேர்த்தியாய் செய்திருக்கிறார். அது தான்
நாம் தற்போது வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக