#407 - *வேதத்தில் இயேசுவிற்கு 30 வயதை குறிப்பிடப்பட்டுள்ளது.. மேலும் அவர்
முப்பத்து மூன்றரை ஆண்டு வாழ்ததாக கூறப்படுகிறதே.. அதற்கான ஆதாரங்களை கொடுக்க
முடியுமா ஐயா???*
*பதில்*
:
இயேசு சிலுவையில் மரித்தபோது அவருக்கு எவ்வளவு வயது என்று
யாரும் துல்லியமாக
சொல்ல முடியாது.
ஆனால் அவருக்கு ஏறத்தாழ 33 வயது
என்ற கணிக்க முடியும்.
இயேசு ஞானஸ்நானம்
எடுத்த போது / தம்முடைய ஊழியத்தைத் தொடங்கியபோது, சுமார் முப்பது
வயதாக இருந்தார்
என்று லூக்கா 3:23 ல் பார்க்கிறோம்.
தேவனுடைய நீதியை நிறைவேற்றும்படி இயேசு ஞானஸ்நானம்
எடுத்துக்கொண்ட வயதும் தனது ஊழியத்தை துவங்கியதும் 30 வயதில் என்று லூக்கா 3:23
மூலம் அறிகிறோம்.
ஒன்றன் பின் ஒன்றாக பட்டியலிட முயலுகிறேன்:
எருசலேமுக்கு இயேசுவின் முதல் வருகை (ஞானஸ்நானத்திற்கு
பின்)
முதல் பஸ்கா – யோ. 2: 13-25
இரண்டாவது பஸ்கா – எருசலேமில் / ஓய்வு நாளில் பெதஸ்தா
குளத்தில் நடக்கும் சம்பவம் – யோ. 5: 1-47
ஓய்வுநாளன்று ஜெப ஆலயத்தில் (மத். 12: 9-14; மாற்கு 3: 1-6, லூக். 6: 6-11)
கூடார பண்டிகை – எருசலேம் செல்ல தயார் நிலை - லூக். 9: 51-62; யோ. 7: 2-11
பிரதஷ்டை பண்டிகை – எருசலேமில் / குருடன் குணமாகுதல் – யோ.
9: 1-41.
விலையேறப்பட்ட நளதம் தைலத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டது -
மத். 26: 6-13; மாற்கு
14: 3-9; யோ. 12:
1-8.
மூன்றாவது மற்றும் இறுதி பஸ்கா - எருசலேமில் / கடைசி பஸ்கா (மத். 26: 17-30; மாற்கு 14:
12-25; லூக்கா 22: 7-20
சீடர்களின் கால்களைக் கழுவுவது – யோ. 13: 1-17
*பஸ்கா* –
வருடத்திற்கு ஒரு முறை தான் வரும் (லேவி. 23:5)
ஞானஸ்நானத்தின்
போது அவருக்கு வயது 30.
அதன்
பின் கிறிஸ்து 3 பஸ்காவை அநுசரித்திருக்கிறார் (3 வருடம்)
இன்னும்
நிறைய நிகழ்வுகளின் அடிப்படையில் ஏறத்தாழ 33½ வருடம் என்பது வேத வல்லுனர்களின் கணக்கு.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக