ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

#408 - கர்த்தருடைய சித்தத்தை என் வாழ்க்கையில் எப்படி அறிந்து கொள்வது என்று சற்று தெளிவாக பதில் தரவும் ஐயா.

#408 - *கர்த்தருடைய சித்தத்தை என் வாழ்க்கையில் எப்படி அறிந்து கொள்வது* என்று சற்று தெளிவாக பதில் தரவும் ஐயா.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அரசாங்க தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்து வருகிறேன்.இதனால் என் வாழ்க்கையில் அவர் சித்தத்தை அறிந்து நடக்க எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா..

*பதில்
* :
தேவ சித்தம் இது தான் என்று சில வாய்ப்புகளை தேர்வு செய்து சிறிய அல்லது பொிய கால அவகாசத்தோடு காத்திருந்து பின்னர் *அது தேவ சித்தம் அல்ல* என்ற தீர்மானத்திற்கு வந்து விட முடியாது.  ஏனென்றால், நம் வாழ்க்கைக்காக தேவன் வானளாவிய வாய்ப்புகளை குவித்து வைத்திருக்கிறார்.

அவர் சித்தம் என்ன என்பது;
*நாம் நினைத்துக் கொண்டிருப்பது அல்ல*.

கீழே கவனிக்கவும்:

தேவ சித்தத்தை அறிகிற *அறிவினாலே* நிரப்பப்பட சொல்கிறார் பவுல்  கொலோசெயர் 1: 9ல்

தேவ விருப்பத்தை கிறிஸ்தவர்கள் அறிய வேண்டும் என்று ஏன் பவுல்  விரும்பினார்? அதனால் அவர்கள் தகுதியான முறையில் நடக்க முடியும் என்று 10-11 வசனம் நமக்குக் கூறுகிறது. (_கொலோ. 1:10-11 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்_)

ஆக, தேவனுடைய வார்த்தைகளான புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் சட்டங்களை அறிந்து கீழ்படிவதன் மூலம் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகளை சரியான தேர்வுகளை நாம் செய்யமுடியும்.

பவுல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு தனி விருப்பத்தைப் பற்றி பேசவில்லை.  1 தெசலோனிக்கேயர் 4: 1-3

தேவனுடைய சித்தம் என்பது *நாம் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்பதே*. 1தெச. 4:3

நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தனித்துவமான விருப்பமா அல்லது எல்லா மனிதர்களுக்கும் தேவ சித்தமா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எபேசியர் 5: 15-17

எபே. 5:8வது வசனம் *ஒளியின் பிள்ளைகளாக நடந்து கொள்ள சொல்வது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அடங்கும்*.

வசனங்கள் 9-10ம் கர்த்தருக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியவற்றின் எடுத்துக்காட்டுகள் அல்லது பிரியமானவற்றின் தன்மைகள். இதுவும் அனைத்துக்  கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தக்கூடியவை.  

நான் எந்த வேலைக்கு செல்வது, எப்பொழுது கடைக்குப் போவது, எப்போது பிரயாணம் துவங்குவது, இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டுமா வேண்டாமா என்பதல்ல தேவனுடைய சித்தம் என்பது !

உங்களுக்கும் எனக்கும் நிச்சயம் தேவ சித்தம் ஒன்று உண்டு - 2பேதுரு 3: 9. நாம் பாவத்திலிருந்து விடுபடுவதே அவருடைய சித்தம் – 1தெச. 4: 3; 1பேதுரு 4: 1-2

ஒருவேளை உங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்து சாராய கடையில் அரசாங்கம் நல்ல பதவியில் அமர்த்தினால் அது தேவ சித்தமாகுமா என்றால் நிச்சயம் இல்லை. மற்றவர்களை அழிக்கும் உத்தியோகமல்லவா அது !!

நாம் பாவம் செய்யாமல் சம்பாதிக்கும் முறைகள் உலகத்தில் ஏராளமான உத்தியோகங்கள் உண்டு.
நீங்கள் எதை செய்தாலும் அதில் தேவன் உங்களை வர்த்திக்க செய்வாராக.

உற்சாகமாய் முன்னோக்கி நகருங்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக