*கேள்வி*: இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமையாக இருந்தது 400 வருடங்களா அல்லது 430 வருடங்களா?
*பதில்* : யாத்திராகம புஸ்தகத்தில் 430 வருடங்கள் முடிந்த அன்றே இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு போனார்கள் என்று வசனம் சொல்லுகிறது.
யாத். 12:40 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
யாத். 12:41 நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
ஆனால் தேவன் ஆபிரகாமிடம் இஸ்ரவேலர்கள் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்று தீர்க்கதரிசனமாக சொல்லி இருந்தார்
ஆதி. 15:13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருப்போம் என்றால் நாம் அங்கே அடிமையாக இருக்கிறோம் என்று அர்த்தம்
அப்படியென்றால் இஸ்ரவேலர்கள் 430 வருடங்கள் அங்கே இருந்தார்கள் தேவன் சொன்னத்திற்கு மேலாக 30 வருடங்கள் அங்கே அதிகமாக இருந்து இருக்கிறார்கள்.
*தேவனுடைய தீர்க்கதரிசனங்கள் பொய்யாய் போயிற்றா?*
என்றைக்குமே தேவனுடைய தீர்க்கதரிசனங்கள் பொய்யாய் போகாது
யாத். 12:40,41 வசனங்களை கவனியுங்கள்:
இஸ்ரவேலர்கள் எகிப்திலே குடியிருந்த வருஷங்கள் 430 வருடங்கள் அவைகள் எல்லாம் அடிமைத்தன வருஷங்கள் அல்ல. ஏனென்றால் தேவன் சொன்னபடி 400 வருடங்கள் மாத்திரமே அவர்கள் அடிமையாக இருந்தார்கள்
மீதி இருக்கக்கூடிய முப்பது வருட வருடங்களை குறித்து பார்ப்போம்.
யோசேப்பு அடிமையாக எகிப்துக்கு விற்கப்பட்ட போது அவருக்கு வயது 17 (பதினேழு)
ஆதி. 37:2 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்;
ஆதி. 37:28 அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
எகிப்திலே யோசேப்பு ராஜாவாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு வயது 30 (முப்பது)
ஆதி. 41:46 யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.
யோசேப்பு எகிப்தின் அதிபதியாகும் வரை 13 வருடங்கள் அங்கே இருந்து இருக்கிறார்.
பின்பு யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபையும் அவனுடைய சகோதரர்களையும் அழைத்த போது முற்பிதாவாகிய யாக்கோபுக்கு வயது 130 (நூற்றுமுப்பது வருஷம்)
ஆதி. 47:9 அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.
முற்பிதாவாகிய யாக்கோபு எகிப்திலே மரித்த போது அவருக்கு வயது 147
(நூற்று நாற்பத்தேழு)
ஆதி. 47:28 யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்;
யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்.
யாக்கோபு எகிப்திலே 17 வருடங்கள் வாழ்ந்து மரித்து இருக்கிறார்.
யோசேப்பு எகிப்துக்கு கொண்டு போகப்பட்டு அவர் அங்கே இருந்த வருஷங்கள் 13
யாக்கோபு மரித்த போது எகிப்திலே அவர் அங்கே இருந்த வருஷங்கள் 17
மொத்தம் 13+17=30 வருடங்கள்
யோசேப்பு எகிப்துக்கு கொண்டு போகப்பட்டதிலிருந்து யாக்கோபின் மரணம் வரை உள்ள வருடங்கள் தான் 30
யாக்கோபு மரித்த பின்பு தான் அடிமைத்தன வருஷங்கள் அதாவது 400 வருடங்கள் தொடங்கி இருக்கிறது
இஸ்ரவேலர்கள் எகிப்திலே குடியிருந்த வருஷங்கள் 30(முப்பது)
(அதாவது முதல் இஸ்ரவேலனாகிய யோசேப்பு எகிப்துக்கு போனது முதல் யாக்கோபின் மரணம் வரை)
இஸ்ரவேலர்கள் எகிப்திலே அடிமையாக இருந்த வருஷங்கள் 400 (நானூறு வருஷங்கள்)
*Answered by Bro.Ariyel Barnabas*
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக