சனி, 24 ஆகஸ்ட், 2019

#358 - சுயாதீனபிரமாணம் என்றால் என்ன?

#358 - *சுயாதீனபிரமாணம் என்றால் என்ன?*

*பதில்* :
*சுயாதீனபிரமாணம் என்றால் என்ன*?

சுயாதீனபிரமாணம்
என்பது ஒரு நபர் உன்னிப்பாகக் கவனிக்கக்கூடிய, கேட்க, நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடிய ஒன்று - யாக்கோபு 1: 22-25

சுயாதீனபிரமாணம் என்பது நாம் நியாயந்தீர்க்கப்படகூடிய, மீறக்கூடிய, பாகுபாட்டைக் காட்டா, உன்னைப் போலவே பிறரை நேசிப்பது, விபச்சாரம் செய்யாதே, கொலை செய்யாதே போன்ற சட்டங்களும் இதில் அடங்கும் – யாக். 2: 8-13

சுயாதீனபிரமாணம் என்பது சத்தியம், ஏனெனில் சத்தியமே நம்மை விடுதலையாக்குகிறது.

ஆனால் அப்படிப்பட்ட சுயாதீனம் எனப்படும் சுதந்திரம் கிறிஸ்துவின் வார்த்தைகளில் நிலைத்திருந்து வாழ்வதன் மூலம் மட்டுமே வருகிறது.

கிறிஸ்துவின் வார்த்தைகள் இறுதியில் நம்மை நியாயந்தீர்க்கும் - யோவான் 8: 31-32; 12:48

*பாவத்திலிருந்து விடுதலையாகும் சுதந்திரம்*
ஆவியினால் வழிநடத்தப்பட்டவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள், வர்கள் அடிமைத்தனத்தில் இல்லை - ரோமர் 8: 14-17; கலாத்தியர் 5: 17-18.
ரட்சிக்கப்பட்டவர்கள்  *புத்திரசுவீகாரம் ஈந்திடும்* என்று அர்த்தமற்று பாடிக்கொண்டு இருக்ககூடாது.

புதிய ஏற்பாட்டின் மூலம் அப்போஸ்தலர்கள் நமக்கு கொடுத்த தேவனுடைய  ஞானத்தை ஆவியானவர் நமக்குக் கற்பிக்கிறார். அந்த வார்த்தைகளால், கிறிஸ்துவின் மனதை நாம் அறிவோம். 1 கொ. 2: 10-16

அந்த வார்த்தைகளைப் படிக்கும்போது, கிறிஸ்துவின் இரகசியத்தை  புரிந்துகொள்கிறோம் - எபேசியர் 3: 4

ஆகவே விசுவாசம் அல்லது நம்பிக்கை என்பது தேவனுடைய வார்த்தையை *வாயால் அல்ல காதுகளினால்* கேட்கும் போது வருகிறது. - ரோமர் 10:17
 
இந்த வார்த்தை விசுவாசத்திற்கு வழிவகுக்கிறது, இது விசுவாசத்தை அறிக்கையிட வழிவகுக்கிறது, தொடர்ந்து இது இரட்சிப்புக்கு வழிவகுக்கிறது - ரோமர் 10: 8-10

ஞானஸ்நானத்தின் மூலம் பாவத்திற்கு மரிக்க,  பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம் - ரோமர் 6: 1-7

நாம் ஞானஸ்நானம் பெறும்போது பரிசுத்த ஆவியின் பரிசைப் பெறுகிறோம் - அப்போஸ்தலர் 2: 38-39

ஆவியானவர் நம்முடைய மீட்பின் உத்தரவாதமாக மாறுகிறார் (நாம் வாங்கிய சுதந்திரம்) - எபேசியர் 1: 13-14

கடவுளின் ஆவி இருக்கும் இடத்தில், விடுதலை / சுதந்திரம் இருக்கிறது - II கொரிந்தியர் 3:17

*விடுதலை / சுதந்திரம், ஆனால் முழுமையான தன்னாட்சி சுதந்திரம் இல்லை*

தேவனுடைய போதனைக்கு கீழ்ப்படிதல் பாவத்திலிருந்து நம்மை விடுவித்ததோடு நின்றுவிடாமல், அது நம்மை தேவனுக்கு அடிமைகளாக்குகிறது - ரோமர் 6: 16-18

தேவனுக்கு அடிமைப்படுத்தப்பட்டதினால் நமக்கு மீட்பு விளைகிறது - ரோமர் 6:22

இதனால்தான் பவுல் தன்னை தேவனின் (அடிமை) வேலைக்காரன் என்று குறிப்பிட்டார் - ரோமர் 1: 1

நம்முடைய சுதந்திரத்தை நாம் பாவத்திற்கான அனுமதியாக அல்லது சுதந்திரமாக பயன்படுத்தாமல்,  தேவனுக்கு அடிமையாக தொடர்ந்து இருக்கும்படி முனைய வேண்டும். இத்தகைய பிணைப்பு பூமிக்குரிய அரசாங்கங்களுக்கு அடிபணிவதிலும் அடங்கும். - கலாத்தியர் 5:13; 1பேதுரு 2: 13-16

நாம் எந்த சட்டத்தின் கீழும் இல்லை என்பதை நமது சுதந்திரம் குறிக்கவில்லை

சட்டம் இல்லாதபோது பாவம் கணக்கிடப்படுவதில்லை - ரோமர் 5:13

பாவம் என்பது சட்டத்தின் மீறல் அல்லது சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது - I யோவான் 3: 4

எல்லோரும் பாவம் செய்கிறார்கள் - ரோமர் 3:23; 1யோவான் 1: 8-10; 2: 1

கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் சட்டத்தின் கீழ் உள்ளனர்.

நீதியைக் கடைப்பிடிப்பவர்கள் தேவனிலிருந்து பிறந்தவர்கள் - I யோவான் 2:29; 3: 7; 3:24

*மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலை / சுதந்திரம்*

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து கிறிஸ்து நம்மை விடுவித்தார் - கலாத்தியர் 3: 10-14

ஏனென்றால், மோசேயின் சட்டம் பாவ மனிதர்களை தண்டித்தது, கிறிஸ்து நம்மை விசுவாசம் கொண்டு கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெறும்போது பாவத்திலிருந்து நம்மை விடுவித்தார் - ரோமர் 3: 19-20; கலாத்தியர் 3: 22-27

மோசேயின் சட்டத்தின் மூலம் - பாவம் நம்மை பாவத்தின் அடிமைத்தனத்தில் வைத்தது - கலாத்தியர் 4: 3

மோசேயின் பிரமாணமாகிய சட்டத்தின் கீழ் விருத்தசேதனம் செய்வது மற்றும் மற்ற 613 கட்டளைகளுக்கு பிணைக்கப்பட்டால் கிறிஸ்துவின் மூலம் நாம் பெற்ற சுதந்திரத்தை இழப்பதாகிவிடும் - கலாத்தியர் 4: 23-24, 30-31; 5: 1-4

*அன்பு என்பது சுதந்திரத்தின் ஒரே சட்டமா*?

சுயாதீனபிரமாணம் – அன்பை வலியுறுத்தும் கருத்து மட்டுமே என்று சிலர் கூறுகின்றனர்
; அன்பு கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்தின் அஸ்திவாரம், ஆனால் அது மோசேயின் சட்டத்தின் அஸ்திவாரமாகவும் இருந்தது - மத்தேயு 7:12; 22: 35-40; ரோமர் 13: 8-10; கலாத்தியர் 5:14; 1யோவான் 4:16

கிறிஸ்துவின் மீதான அன்பு அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. ஒரு நபர் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் கிறிஸ்துவை நேசிக்க முடியாது. - யோ. 14:15; 15:14; 1யோ. 2: 4-7; 5:23.

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் கர்த்தருடைய வசனத்தை உறுதியாய் பற்றிக்கொண்டு விசுவாசத்தோடே நடந்தால் பொறுமையும் தேவபக்தியும் அன்பும் பிறக்கிறது.  இவைகள் பெருகினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.  (2பேதுரு 1:5-8)

கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. (யாக். 5:7-8)
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 


YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக