வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

#357 *கேள்வி* இயேசுவின் பெயர் மட்டும் தமிழில் இயேசு ஆங்கிலத்தில் ஜீசஸ் மற்றும் ஒவ்வொரு மொழிகளில் ஒவ்வொரு பெயரினை மொழிபெயர்த்துள்ளனர்


#357
*கேள்வி*
எந்த ஒரு நபரின் பெயரை எடுத்தாலும் அனைத்து மொழிகளிலும் ஒரே பெயர்தான் உதாரணமாக:

என் பெயர் அன்புராஜ் என் பெயரை தமிழ் ஆங்கிலம் இந்தி மலையாளம் எபிரேயம் என அனைத்து மொழிகளிலும் அன்புராஜ் தான்.

ஆனால் இயேசுவின் பெயர் மட்டும் தமிழில் இயேசு ஆங்கிலத்தில் ஜீசஸ் மற்றும் ஒவ்வொரு மொழிகளில் ஒவ்வொரு பெயரினை மொழிபெயர்த்துள்ளனர்

இதின் உண்மை தன்மையை விளக்கவும் மற்றும் இயேசு என்ற பெயர் எபிரேய மொழியில் என்ன என்று அழைக்கப்படுகிறது என்பதையும் விளக்கவும்?

*பதில்* :
தமிழ் மொழியின் சிறப்பே – அதன் விரிந்த பரந்த சகல சப்த ஒலிகளுக்கும் எழுத்து உள்ளவை.

ஆனால் இந்த வசதி எல்லா மொழியிலும் இல்லை.

நான் சுமாராக அரபு எழுத படிக்க பேச அறிந்தவன். 27 வருடங்களாக வெளி நாட்டில் வசிப்பதால் இலகுவாக உணர்ந்து கொண்டேன்.

துபாயில் பேசும் அரபு வார்த்தையை அரபு பேசும் எகிப்து காரரிடம் சொல்ல சொன்னால் – அவர் நாக்கு சுழலாது !!

ஜ – என்பது அவர்கள் மொழியில் இல்லை.

அதற்கு பதிலாக ஸ என்றும் அழுத்தி பயிற்றுவித்தால் கூடுமானால் ஷா என்பார்கள்.

அப்படிதான் பவுல் (கிரேக்கம்) – சவுல் (எபிரேயம்)
ஆனால் இரண்டிற்கும் நேர்மாறான அர்த்தம் உண்டு !!

மேலும், வேதாகம காலங்களில் அவரவர் பொருளுக்கேற்ப பெயர் இருந்தது.

உதாரணத்திற்கு :
1-
என் ஆண்டவனாகிய நீர் *நாபால்* என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பேர் எப்படியோ *அப்படியே அவனும் இருக்கிறான்*; அவன் பேர் நாபால், அவனுக்குப் *பயித்தியமும்* இருக்கிறது; 1சாமு 25:25

2-
சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே *ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா* என்னும் *மறுபேர்பெற்றவனுமாகிய யோசே* என்பவன்அப் 4:36

மேலும்:
சூழ்நிலையின் நிமித்தம் வைக்கப்பட்ட பெயர்களும் உண்டு (ஆதி 29:32-35)

1992ல் பஹ்ரைன் தேசத்தில் ஒரு இலங்கை நண்பர் ஒருவரின்  பெயர் மண்ணாங்கட்டி !!  அவர் ஒர் இஞ்சினியராக இருந்தார் !!

இவருக்கு முன்னர் பிறந்த 9 பேர் இறந்தார்களாம் – ஆகவே இவரை அப்படி அழைத்தார்கள்.

தங்காது என்று ஒரு நண்பரும் இருந்தார் எனக்கு.. நீங்கள் தமிழ் நாட்டில் இப்படி இன்னும் அதிக பெயர்களை பார்க்கலாம்.

ஊர் ஊருக்கு கலாசாரத்தின் அடிப்படையில் ஒலியின் நிமித்தமாக அர்த்தத்தின் நிமித்தமாக பெயர் மாறுபட்டது. நபர் அவரே தான்.

இயேசு என்ற தமிழ் பெயருக்கு எபிரேயத்தில் யெசுவா.


*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 

*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் எங்கள் Closed - Whatsapp குழுவில் இணைய அழைக்கிறோம்




** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக