சனி, 24 ஆகஸ்ட், 2019

#359 - பொல்லாத இணையதள கணிணி காலம்

#359 - *பொல்லாத இணையதள கணிணி காலம்* - விளக்கவும்

உற்று பார்க்க கூடிய சந்தர்ப்பங்களில் ஒன்று வேதம் வாசிக்க வேண்டும் அல்லது எப்பொழுது எல்லாம் கர்த்தராகிய இயேசுவையும் பிதாவாகிய தேவனையும் அறிகிற அறிவாகிய கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏன் ஊழியர்கள் செய்வதில்லை? அப்பொழுது தானே உற்று பார்க்கவோ நிலை நிற்கவோ கூடிய முயற்சிகளை எடுப்பார்கள். யாக்கோபு 1:25

ஏனெனில் பொல்லாத இனணையதள கணிணி காலத்தில் வாலிப பிள்ளைகள் குடும்ப நபர்கள் விருதாவாக்கப்படுகிறார்கள்.

*பதில்* :
அநுதின வேத வாசிப்பு – நம்மை ஞானவானாக்குகிறது (சங். 119:99)

அநுதின வாழ்க்கையின் முன்னேற்றம் – சகல வெற்றியோடு கடந்து சென்று மேன்மையாக முன்னுதாரணமாக வாழ தேவனுடைய வார்த்தையை *படிப்பதோடு நின்றுவிடாமல் கடைபிடிக்க வேண்டும்*. அப்பொழுது மாத்திரமே – வாழ்க்கையில் முன்னேற்றத்தை / கிறிஸ்துவுக்குள் வெற்றியை காணமுடியும் - 2தீமோ. 3:15-17

அநேகருக்கு ஏகப்பட்ட வசனங்கள் மனனமாக தெரியும் – ஆனால் என்ன பிரயோஜனம்?  தேவ வார்த்தை ஒன்றை இப்படி தான் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாலும் அதை அறிந்தும் தன் சொந்த வாழ்க்கையில் உடனடியாக நடைமுறை படுத்தாமல்
– மதிப்பின் அடிப்படையிலும்
– கொள்கையின் அடிப்படையிலும்
– கூடுகையின் அன்பின் அடிப்படையிலும்
– ஐக்கியத்தின் அடிப்படையிலும்
– நாம் கூடும் இடங்களில் தவறாக செயல்படுத்தப்படுகிறது என்று அறிந்தும் அங்கு சொல்வதற்கு தலையாட்டிக் கொண்டிருந்தால்;

நியாயதீர்ப்பு நமக்கு எதிராக இருக்கும் என்று வேதம் தெளிவாய் சொல்கிறது (யோ. 12:48)

---- அன்று நீதிபதியிடம் வாதாட நமக்கு நேரம் கொடுக்கப்படாது !!!
அது *தீர்ப்பு வெளியாகும் நாள்* ...  நீதிபதியாகிய இயேசு கிறிஸ்து சொல்கிறதை நாம் வெறுமனே காதால் கேட்டுக்கொண்டு போக வேண்டிய இடத்திற்கு *அனுப்பிவைக்கப்படுவோம்* !!  (2தீமோ. 4:1, 2தீமோ. 4:8, ரோ. 2:5, 2பேதுரு 2:9, வெளி. 6:17)

கிறிஸ்தவனே உலகத்தை ஜெயிக்கிறவன் – 1யோ. 5:5

*வாரத்தின் முதல் நாளிலே* ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனை தொழுது கொள்ள வேண்டும். (அப். 2:1)

*வாரத்தின் முதல் நாளிலே* ஒவ்வொரு கிறிஸ்தவனும் கர்த்தருடைய மரணத்தை நினைவுகூறவேண்டும் (அப். 20:7)

*வாரத்தின் முதல் நாளிலே* ஒவ்வொரு கிறிஸ்தவனும் காணிக்கை  கொடுக்க வேண்டும் (1கொரி. 16:1-2)

அநுதினமும் *ரோமர் – யூதா நிரூபங்களை வாசிப்பதில்* கவனம் செலுத்தும் போது கணினி காலமானாலும் நம்மை வீணராக்கவொட்டாது.

தினமும் ஏதாவதொரு *சங்கீதத்தை மாத்திரம் வாசித்து விட்டு ஓடினால்* – கிறிஸ்தவ வாழ்க்கைக்கு கிறிஸ்துவின் கட்டளை தூரமாகவே இருக்கும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக