#339 - *சிலை வழிபாட்டின் ஆரம்பம், முதன்
முதலில் எங்கிருந்து வந்தது என்பதை வேதாகமத்தின் அடிப்படையிலிருந்து கொஞ்சம்
விளக்குங்கள் ஐயா?*
*பதில்* :
சந்தேகத்திற்கு இடமின்றி - ராகேல்
தனது தந்தையின் சிலையை திருடியதன் கணக்கிலிருந்து சிலை வழிபாட்டை குறித்த குறிப்பு
வேதாகமத்தில் துவங்குகிறது (ஆதி. 31:19)
எகிப்தில் நீண்ட காலம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இஸ்ரவேலர்
ஜனங்கள், சிலைகளால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொண்டனர்.
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்
என்பதே முதல் கட்டளை. (யாத்திராகமம் 20:
3; உபா. 5: 7).
மேலும்,
அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்;
அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம் என்றும்
கட்டளையிடப்பட்டது. (யாத்திராகமம் 20:23, 23:13).
இயேசு என்றும்
மரியாள் என்றும்
அல்லது சிலுவை படம்
அல்லது சிலுவையை
இலையால்/ மரத்தால் / தங்கத்தில் / வெள்ளியில் / வெண்கலத்தில் என்று எதிலும் சுரூபம்
வைத்து வழிபடுவதும், கும்பிடுவதும் அதற்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவதும்
இயேசு என்று ஒரு படத்தை வைத்துக்கொண்டு பார்த்து
ஜெபிப்பதும் --
*சிலை விக்கிரக வழிபாடு தான்*.
… சூனியக்காரரும்,
விபசாரக்காரரும், கொலைபாதகரும், *விக்கிரகாராதனைக்காரரும்*, பொய்யை
விரும்பி அதின்படி செய்கிற யாவரும் பரலோகம் போக முடியாது (வெளி. 22:15)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக