திங்கள், 19 ஆகஸ்ட், 2019

#338 *கேள்வி* இன்றைய கால உலகில் இளைஞர்கள் பாலினம் (ஆண் பெண்) வித்தியாசம் இல்லாமல் பழகுகிறார்கள். இது சரியா?


#338

*கேள்வி*
இன்றைய கால உலகில் இளைஞர்கள் பாலினம் (ஆண் பெண்) வித்தியாசம் இல்லாமல் பழகுகிறார்கள். இது சரியா?

*பதில்* :
இந்த கேள்விக்கு கலாசாரத்தையும் மனதில் வைத்து சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

திருமணம் ஆகாத இளைஞர்கள் என்ற வகையில் உங்கள் கேள்வியை புரிந்து கொள்கிறேன்.

ஆண் x பெண் பாலர் என்பது எதிர் பாலராகும்.

இருவரது உணர்வுகளும் எதிர்மறையானது.

*பொதுவாக*:
- ஆண்கள் சரீர பலமுள்ளவர்கள் என்றால் பெண்கள் மனவலிமையுள்ளவர்கள்.

- ஆண்கள் துரிதமாக முடிவெடுத்தாலும் மாற்றிக்கொள்ள தயங்க மாட்டார்கள் என்றால் பெண்கள் தாமதமாக திடமாக தீர்மானிப்பவர்கள்.

- ஆண்கள் எதையும் தாங்கி கொள்ள முடியாதவர்கள் என்றால் பெண்கள் சகலவற்றையும் தன் ஆயுட் காலமுழுவதும் இரகசியங்களை அடக்கி வைத்து கொள்ளமுடியும்.

இப்படி பல வேறுபாடுகள் உண்டு.

தங்களுக்கு தாங்களே பதிலளித்துக் கொண்டாலும் - எதிர் பாலரின் மீது ஏற்படும் பாலியல் ஈர்ப்பின் தூண்டுதல் இல்லாமல் இருக்க அதிக சிரமப்பட வாய்ப்பு உள்ளது.

நீதி 15:24 கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.

பாவம் பிறக்காமல் இருக்க - தங்கள் எல்கையை அறிந்து நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தனித்துவ அல்லது தனிமையான தொடர்புகள், இரகசிய உரையாடல்கள் போன்றவை தூண்டப்படுதல் – நல்ல நட்பில் முடியாது.

1கொரி 10:23 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.

அதே வேளையில் - ஆண்களுடன் பழகும் நட்பு ஆண்களுக்கும், பெண்களுடன் பழகும் நட்பு பெண்களுக்கும் கசந்து போனால் அவர்களது எண்ணங்கள் சரியானதல்ல என்று நமக்கே புலப்படுமே ??

அவசியமில்லாத நட்பில் லாவகமாய் / அறியாமல் விழுந்து பாவத்திலிருந்து தப்பிக்க வேண்டிய ஒவ்வொருவரின் கடமையன்றோ?
2 தீமோ 2:22

 Shortly we refer – A Golden Rule for youths from Bible is 2T222 (2Tim2:22) -

தங்கள் எல்கை எது என்றும் தன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து எதிர் பாலரோடு நட்பில் பழகும் அளவிற்கு நம் இளம் சமுதாயம் வளர்ந்துவிட்டதா என்ற சந்தேகம் இன்னும் எனக்கு உண்டு.

*Eddy Joel*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 

-நீங்களும் இந்த குழுவில் இணைந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் சொடுக்கவும்:

Group 2:

Group 1:

** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக