வீட்டை நடத்தக்கூடிய பொறுப்பை தேவன் யாருக்கு கொடுத்து இருக்கிறார்?
கிறிஸ்தவ குடும்பத்தில் கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்
இப்போது வீட்டை நடத்தும் படி தேவன் யாருக்கு கட்டையிட்டு இருக்கிறார் என்று கற்றுக் கொள்ளுவோம்
தேவன் வீட்டை நடத்தக்கூடிய பொறுப்பை புருஷர்களுக்கு கொடுக்கவில்லை
தேவன் வீட்டை நடத்தக்கூடிய பொறுப்பை மனைவிக்கு தான் கொடுத்து இருக்கிறார்
கீழே உள்ள வசனத்தை கவனியுங்கள்
1Ti 5:14 (KJV) I will therefore that the younger women marry, bear children, guide the house, give none occasion to the adversary to speak reproachfully.
1Ti 5:14 (KJV+) I will1014 therefore3767 that the younger women3501 marry,1060 bear children,5041 guide the house,3616 give1325 none3367 occasion874 to the3588 adversary480 to speak reproachfully.5484, 3059
1Ti 5:14 ,,,,,,, விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.
மனைவியானவள் வீட்டை நடத்தவும் என்று தமிழ் வேதாகமத்தில் மொழிப் பெயர்த்து இருக்கிறார்கள்
ஆனால் கிரேக்க வேதாகமத்தில் மனைவியானவள் வீட்டின் சர்வதிகாரியாக (தன் குடும்பத்தை வழிநடத்தக்கூடியள் or குடும்பத்தின் தலையாக ) இருக்கிறாள் என்று தான் தேவன் சொல்லுகிறார்
G3616
οἰκοδεσποτέω
oikodespoteō
oy-kod-es-pot-eh'-o
From G3617; to be the head of (that is, rule) a family: - guide the house.
மனைவிக்கு தலையாக புருஷன் இருக்கிறான், புருஷனுடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிப்பட்டு தான் மனைவி இருக்கிறாள்
ஆனால் வீட்டை நடத்தக்கூடிய பொறுப்பை தேவன் மனைவிக்கு தான் கொடுத்து இருக்கிறார்
இன்றைக்கு எத்தனை புருஷர்கள் தங்களுடைய மனைவியை குடும்பத்தின் தலையாக அல்லது சர்வதிகாரியாக இருப்பதற்கு அனுமதிக்கிறார்கள்?
தேவனுடைய வாக்கியங்களை உணர்ந்து கொண்ட புருஷன் நிச்சயமாக தேவனுடைய வார்த்தையின்படி தான் நடப்பான்
மனைவியானவள் வீட்டை எப்படி நடந்த வேண்டும்?
மனைவியானவள் புத்தியுள்ளவளாக இருப்பாள் என்றால் தன் வீட்டை(குடும்பத்தை) கிறிஸ்துவுக்குள்ளாக கட்டக்கூடியவளாக இருப்பாள்
Pro 14:1 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
வீட்டை நடத்தக்கூடிய மனைவியானவள் எதில் நிலை கொண்டு இருக்க வேண்டும்
1Ti 2:15 அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால்,,,,,,,
மனைவியானவள் குடும்பத்தின் தலையாக இருப்பாள் என்று சொன்னால் அவள் தன் குடும்பத்தை எப்படி வழி நடத்துவாள்?
A)அவள் தன் புருஷக்கு உண்மையுள்ளவளாக இருப்பாள்
Pro 31:11 அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
Pro 31:12 அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
B)தன் வீட்டாருக்கு தேவையான நன்மைகளை அவள் செய்வாள்
Pro 31:21 தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
C) தன் பிள்ளைகளுக்கு கர்த்தருடைய வார்த்தைகளை அவள் போதிப்பாள்
Pro 31:26 தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
D) தன் வீட்டு காரியங்கள் எப்படி இருக்கிறது என்று கண்ணோக்கமாய் இருப்பாள்
Pro 31:27 அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
E) தன் குடும்பத்தில் அவள் நற்சாட்சியுள்ளாக இருப்பாள்
Pro 31:28 அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப்பார்த்து:
Pro 31:29 அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
ஒரு மனைவியானவள் அகங்கரியாக இருப்பாள் என்றால் அந்த வீட்டிற்கு என்ன நடக்கும்?
Pro 15:25 அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்;.....
தொடர்ந்து கிறிஸ்தவ குடும்பங்களைப் பற்றிக் கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் எங்களோடு தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள அன்போடு அழைக்கிறோம்
ஆராதனை நேரம்
ஞாயிறு காலை
9:30 to 11:30 AM
7:00 to 8:00 PM
வேத வகுப்பு
வியாழன் மாலை
7:00 to 8:00 PM
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக