செவ்வாய், 2 ஜூலை, 2019

பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

பிள்ளைகளை கிறிஸ்துவுக்குள் நன்றாக வளர்க்க வேண்டும் என்று பிரயாசப்படுகிற பெற்றோர்கள்  மாத்திரம் இந்த சத்தியங்களை படியுங்கள்

பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து வேத வாக்கியங்களை கொண்டு கற்றுக் கொள்ளப்போகிறோம்

பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குறித்து தேவன் என்ன சொல்லி இருக்கிறாரோ அப்படியே அவர்களை வளர்க்கும் போது நிச்சயமாக அவர்களுடைய மரணபரியந்தம் தேவனை பின்பற்றுவார்கள்

நிறைய கிறிஸ்தவ குடும்பங்களில் குழந்தை பேரு இல்லாமல் சமுதாயத்தாலும் தங்களுடைய சொல்லு சொந்தங்களினாலும் அவமானப்படுத்தப்படும் போது  பலவிதமான மன உளைச்சலோடு வாழ்ந்து வருவார்கள்

அப்படிப்பட்டவர்கள் தேவனிடத்தில் மன பாரத்தோடும்  அழுகையோடும்  ஜெபித்து பிதாவே எங்களுக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை தாரும் என்று கெஞ்சுவார்கள்

தேவன் மனம் இறங்கி அவர்களுக்கு கர்ப்பத்தின் கனியை கொடுக்கும் போது  அந்த   பிள்ளையை தேவனுக்குள்ளாக  எப்படி வளர்க்க வேண்டும் என்று கவலை படமாட்டார்கள்
தங்கள் இஷ்டப்படி வளர்க்க முயற்சி செய்வார்கள்

ஆரம்பத்தில் பெற்றோருக்கு இருந்த தாழ்மை குணம் மறைந்து போய் பெருமையின் குணம் தான் அங்கே வெளிப்படும்

பக்தியுள்ள சந்தியை பெறும்படி தான் தேவன் திருமண பந்தத்தில் இணைத்து இருக்கிறார் அதை மறந்து தேவனுக்கு விரோதமாக எதிர்த்து நிற்கும் போது அதற்கான விளைவுகளை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும்

நீங்கள் தேவனுடைய சமூகத்தில் வேண்டுதலோடு கர்ப்பத்தின் கனியை  பெற்று இருப்பீர்கள் என்றால் அதை நிறைவேற்ற தாமதம் செய்தீர்கள்

1) பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என்பதையும் கர்ப்பத்தின் கனி கர்த்தரால் கிடைக்கும் பலன் என்பதையும்  பெற்றோர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்
Psa 127:3 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

2) சிம்சோனின் தகப்பனாகிய மனோவா பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று தேவனிடத்தில் கேட்டார்
Jdg 13:12 அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.

நாமும் பிள்ளைகளை வளர்க்கக்கூடிய விசயத்தில் மனோவாவை போல தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும்

A) உங்கள் பிள்ளைகள் இப்படி இருக்க விரும்புவீர்களா?
1) திருடனாகவும் பண ஆசையுள்ளவனுமாயும் இருக்க வேண்டும்
2) கொலைகாரனாக இருக்க வேண்டும்
3) பொய் சொல்லக்கூடியவனாக இருக்க வேண்டும்
4) மதுபானத்திற்கும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவனாக இருக்க வேண்டும்
5) வேசித்தனம் அல்லது விபச்சாரம் செய்கிறவனாக இருக்க வேண்டும்
6) களியாட்டுகளில் (உல்லாசமாய்) ஈடுபாடு உடையவனாக இருக்க வேண்டும்
7) புகை (சிகரெட்) பிடிக்கிறவனாக இருக்க வேண்டும்
8) பெற்றோருக்கு கீழ்ப்படியாதவனாக இருக்க வேண்டும்
9) கோபக்காரனாகவும் மூர்க்கவெறி கொண்டவனாகவும் இருக்க வேண்டும்
10) தேவன் இல்லையென்று சொல்லக்கூடியவனாக இருக்க வேண்டும்

இப்படி அநேக காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம்

மேலே சொன்னபிரகாரம் உங்கள் பிள்ளைகளை நீங்கள் நிச்சயமாக வளர்க்க ஆசைபட மாட்டீர்கள்

ஆனால் உலகம் அவர்களை இப்படிப்பட்டவர்களாக தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

B) உங்கள் பிள்ளைகளை இப்படி வளர்க்க ஆசைபடுகிறீர்களா?
1) தேவனை எப்போதும் தேட கூடியவர்களாக இருக்க வேண்டும்
2) பரிசுத்தமாய் வாழக் கூடியவர்களாக இருக்க வேண்டும்
3) சபைக்கு தூணும் ஆதாரமுமாய் இருக்க வேண்டும்
4) தேவனுடைய வார்த்தைகளை மாத்திரம் பிரசங்கிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
5) அநேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
6) பெற்றோருக்கு சகல காரியத்திலும் கீழ்ப்படியக் கூடியவர்களாக இருக்க வேண்டும்
7) கிறிஸ்துவைப் போல பாடுபடக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
8) கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய் வளரக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
9) மரணபரியந்தமும் கிறிஸ்துவுக்குள் இருக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
10) குடும்பத்தோடு தேவனை சேவிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்

இன்னும் அநேக காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம்

உங்கள் பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்க்க வேண்டும் என்றால் தேவன் தம்முடைய வேத வாக்கியங்களை கட்டளையிட்டது போல பிள்ளைகளை வளர்ப்பீர்கள் என்றால் அவர்கள் தேவனுக்குள்ளும் கிறிஸ்துவுக்குள்ளும் நிலைத்து இருப்பார்கள்

3) பிள்ளைகளை வளர்க்கக்கூடிய விசயத்தில் இரண்டு வழிகள் நமக்கு முன்பதாக இருக்கிறது
1) தேவனுடைய கட்டளையின் (வார்த்தை) படி வளர்ப்பது
2) உலகத்தாரைப் போல சுயமாய் வளர்ப்பது
Jer 21:8 ,,,,, இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று வேத வாக்கியங்களை கொண்டு தெளிவாக கற்றுக் கொள்ளுவோம்
Psa 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற சத்தியம் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்றால் தொடர்ந்து இனி வரக்கூடிய எல்லா பதிவுகளையும் ஷேர் (SHARE) செய்யும்படி வேண்டுகிறேன்  ஏனென்றால் மற்றவர்களும் அதன் மூலமாக பிரயோஜனமடைவார்கள்

கர்த்தருக்கு சித்தமானால் பிள்ளைகளை வளர்க்கக்கூடிய விதங்களை குறித்து அநேக சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் எங்களோடு தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள அன்போடு அழைக்கிறோம்

ஆராதனை நேரம்
ஞாயிறு காலை
9:30 to 11:30 AM
7:00 to 8:00 PM
வேத வகுப்பு
வியாழன் மாலை
7:00 to 8:00 PM

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக