புதன், 17 ஜூலை, 2019

#275 கேள்வி யோ 12:13ல் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு... நோக்கம் என்ன?

#275 *யோவான் 12:13ல் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டார்களே... அதன் நோக்கம் என்ன?*

*பதில்*
ஃபொய்னிக்ஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு பெரிய / அறியப்படாத கிளைகள் / பேரீச்சம் இலைகள் என்று பொருள்.

லேவி. 23:40ல் மகிழ்ச்சியாயிருக்கும் போது உபயோகப்படுத்தப்பட்டதை – இஸ்ரவேலர் மத்தியில் சந்தோஷத்தின் நேரத்தில் இந்த கிளைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அறிகிறோம். மேலும் சங். 92:12;  வெளி. 7:9 வசனங்களிலும் காணமுடிகிறது.

மரக்கிளைகள் என்று பொதுவாக மாற்கு 11:8 & மத். 21:8ல் வாசிக்கிறோம்.
இயேசுவின் பவனியின் போது கிளைகள் மாத்திரம் அல்லாமல்  வஸ்திரங்களையும் தெருக்களில் விரித்தார்கள் – மாற்கு 11:8 & மத். 21:8.

இந்த இலை பல நாட்களுக்கு காய்ந்து போகாமல் இருக்கும் தன்மையுள்ளது.

இப்படி குருத்தோலைகளை பிடித்துக்கொண்டு பெரிய ஞாயிறு என்று சீஷர்களோ ஆதி கிறிஸ்தவர்களோ வலம் வந்ததாக வேதத்தில் இல்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக