செவ்வாய், 16 ஜூலை, 2019

#273 - இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்? அத்திமர காலமாய் இல்லாதிருந்தும் ஏன் சபித்தார்...

#273 - *இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்? அத்திமர காலமாய் இல்லாதிருந்தும் ஏன் சபித்தார்*...

மாற்கு 11:13-14 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ எனறு பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. மாற்கு 11:13,14.


*பதில்*:
பொதுவாக எல்லா மரங்களும், காய்க்கும் செடிகளும்
இலையுதிர் காலத்திற்கு பின்னர் புதிய இலை துளிர்த்து, பூத்து, பிஞ்சு விடும்.

அத்தி மரமோ இந்த வரிசையில் மாற்றம் உள்ளது.
இலையுதிர் காலத்திற்கு பின்னர் முதலில் பூத்து பிஞ்சு விட்டு பின்னரே இலை துளிர்க்கும் !!

ஆகவே, ஒரு மரத்தில் இலை நிறைந்திருக்கிறதென்றால், அது ஏற்கனவே பூத்து பிஞ்சு விட்டு பழம் பழுத்து இருக்க வேண்டிய கட்டம் அது.

எல்லோரும் போகும் பாதையில் (வ11) பார்வைக்கு அழகாய் இலைநிறைந்து ஒரு அத்தி மரம் இருக்கிறதென்றால், போகிறவர் வருகிறவர் பார்வைக்கு இந்த மரம் மிகுந்த கனிகளை தாங்கி இருப்பது போல ஒரு தோற்றத்தை, பிம்பத்தை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது !!! (வ14)

ஒரு சரக்கும் இல்லாமலேயே,
வேதத்தை தூக்கி சுமந்து அல்லேலூயா, ஸோத்ரம், ஸோத்ரம், ஸோத்ரம், பிரைஸ் த லாடு என்று முனங்கிக் கொண்டே நாலு வசனங்களை மனனமாக சொல்லி பாஸ்டர் என்ற போர்வையில் அநேகரை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மனுஷனும் மற்றவர் பார்வைக்கு வேஷமாக திரிந்து கொண்டிருந்தால் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவின் வார்த்தையே அவனுக்கு நியாயந்தீர்க்கும் (வ14, யோ. 12:48)

இந்த மரம் வேஷம் போட்டு நின்று கொண்டிருந்ததால் தன் வாழ்கையையே இழந்ததை மற்றவர்களுக்கு பாடமாக இருந்தது (வ20-22)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

--------------------*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக