திங்கள், 15 ஜூலை, 2019

#272 - லாமேக்கு எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்; யார் அந்த மனுஷன், யார் அந்த வாலிபன்?

#272 - *லாமேக்கு கொலை செய்த மனிதர் யார்?* ஆதி 4:23 லாமேக்கு .... எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;

யார் அந்த மனுஷன், யார் அந்த வாலிபன்? -  விளக்கவும்

*பதில்*:
வேதாகமம் – நாம் எப்போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பித்துக்கொண்டேயிருக்கிறது.

நமக்கு முன்னதாக வைக்கப்பட்டிருக்கும் இந்த சம்பவமும் ஒரு முன்னுதாரனம்.

பல பெண்களை மணக்கும் குணமுள்ளவர் மட்டுமல்ல லாமேக், சிருஷ்டிப்பிற்கு பாவம் எவ்வளவு விரைவாக சமூகத்திற்குள் நுழைந்தது என்பதற்கான ஒரு குறிப்பையும் நமக்குத் இது வெளிபடுத்துகிறது.

தான் கொலை செய்தது மாத்திரமல்லாமல் அதற்கு நியாயமும் கற்பிக்கிறார் லாமேக்.

எப்படியென்றால் - தன்னை காயபடுத்தினவனை கொன்று போட்டேன், தன்னை அடித்தவனை /கீறினவனை / ஆழமான காயம் படுத்தினவனையும் விட்டு வைக்காமல் கொலை செய்தேன். ஆகவே நீங்கள் தைரியமாக இருங்கள். என்னை மீறி ஒருவனும் யாரையும் எதுவும் செய்து விட முடியாது என்று ஆனவமாக / திமிரோடு சொல்கிறார்.

ஆபேலை கொன்ற காயீனின் 5வது தலைமுறை தான் இந்த லாமேக் என்பதை மறக்க வேண்டாம்...

காயீன் ->ஏனோக் -> ஈராத் -> மெகுயவேல் -> மெத்தூசவேல் -> லாமேக் (ஆதி 4:17-18)

தேவனுக்கு விரோதமாக தான் மனிதனை கொலை செய்து விட்டோம் என்று வருந்தாமல் தனது கொலையைப் பற்றி பெருமிதம் கொள்கிறார் லாமேக்.

அவர் செய்த செயலுக்கு பழிதீர்க்கும் படியாக யாராவது அவருக்குப் பின் வந்தால், அவர்களின் தண்டனை 77 மடங்கு கடுமையானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

காயீனை தேவன் பாதுகாத்தது போல (ஆதியாகமம் 4:15), லாமேக் அதை விட இன்னும் பெரிய பாதுகாப்பிற்கு தகுதியானவர் என்று நினைக்கிறார்.

ஆனால் (ஆதி 6:5) மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டார்.  இதனிமித்தம் பூமி முதல் முறையாக நோவாவின் காலத்தில் அழிக்கப்பட்டது (ஆதி 6:7, 7:4, 7:21-23)

லாமேக் எந்த மனுஷனை எந்த வாலிபனை கொலை செய்தார் என்ற குறிப்பு வேதத்தில் இல்லை – மாறாக அவர் செய்த செயலை நமக்கு முன்னுதாரனமாக / எச்சரிப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

நாம் செய்யும் எந்த தவறும் தேவனுடைய பார்வையில் மறைந்திருக்க மாட்டாது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும் போது அது வரை செய்த எல்லா பாவத்திற்கும் மன்னிப்பு பெற்றுக்கொள்கிறோம் (அப் 22:16)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக