ஞாயிறு, 14 ஜூலை, 2019

#271 - இன்றைக்கு ‌அனேகர்(எல்லா மதத்தினரும்) Tik tok எனும் ஆஃப் மூலம் பல்வேறு இழிவான காரியங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்...

#271 - *இன்றைக்கு ‌அனேகர்(எல்லா மதத்தினரும்) Tik tok எனும் ஆஃப் மூலம் பல்வேறு இழிவான காரியங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்* ...மற்ற மதங்களை பற்றி பிறகு பார்க்கலாம்... குறிப்பாக என் கேள்வி இதை‌ அனேக கிறிஸ்தவர்களும் வீடியோக்களை போடுகிறார்கள்..இப்படி இவர்கள் செய்வதை ‌குறித்து வேதம் என்ன கூறுகிறது...இதற்கான விளக்கம் வேதத்தில் இருந்து வேண்டும் ஐயா....  
*பதில்*: இக்காலத்தில் நமக்கு இருக்கும் அநுதின பொருப்புகளை செய்து முடிக்கவே பகல் 12மணி நேரம் போதவில்லை. அநேகர் இரவு 11மணிக்கு உறங்கி காலை 5மணிக்கு எழும்பினாலும் பல காரியங்களை செய்து முடிக்க சமயம் போதுவதில்லை. பிரதான கடமையாக அனுதின வேதம் வாசிப்பு வேண்டும் என்பதை பலர் மறந்தே போனார்கள். Whatsappல் வரும் வசனங்களையும் வசன போஸ்டர்களையும் ஆடியோ அல்லது வீடியோ செய்திகளையும் கேட்டு ஆண்டவருக்கு நன்றி சொல்வதை காட்டிலும் அனுப்பினவருக்கு நன்றி சொல்லியே அந்த நாளை ஆரம்பித்து விடுகிறார்கள். தேவனுக்கு நன்றி சொல்வதை மறந்தார்கள்... மொபைல் ஃபோனில் – பைபிள் மாத்திரம் அல்ல, பல படங்களும், பல செய்திகளும், பலவிதமான வீடியோக்களும், பலவித சம்பாஷனைகளும், பலவித செயல்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு *அழுக்கு* சாதனம். வேத வசனத்தை மாத்திரமே கொண்டுள்ள அச்சிடப்பட்ட நம் கையில் புத்தகமாக இருப்பதன் பெயர் “*பரிசுத்த* வேதாகமம்” மின்சாரம் கண்டு படிக்காத காலத்தில் எப்போது விடியும் – தேவனுடைய வார்த்தையை தியானிக்கலாம் என்று தாவீது காத்து கிடந்ததினால் – தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகவும் இராஜாவாகவும் வாழ்ந்தார். (2 சாமு. 7:15-16, சங். 78:70, சங். 89:20-37, அப். 13:22, சங். 84:10) தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாத சவுலினிடதிலிருந்து இராஜ்ஜியபாரம் பிடுங்கப்பட்டு தன் இருதயத்திற்கு ஏற்ற மனுஷனிடத்தில் தேவன் கொடுத்தார் (1சாமு. 13:14) TikTok / Facebook / Twitter / Instagram / Whatsapp போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தவறல்ல. தூரத்தில் உள்ளவர்களை அருகாமையில் இந்த தொழில் நுட்பங்கள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் செய்ய வேண்டிய வேலையை செய்யவிடாமல் நேர விரயம் செய்து இதன் மூலமாக வீணடிப்பதற்கு இவைகள் காரணமாகி போனது. தங்களை தாங்களே கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள அநேகர் தவறிவிட்டு அவைகளுக்கு அடிமையாகி விட்டார்கள். புருஷனிடம் மனைவி பேச நேரமில்லை. மனைவியிடம் புருஷன் பேச நேரமில்லை. பெற்றோரிடம் பிள்ளைகள் பேச நேரமில்லை பிள்ளைகளிடம் பெற்றோர் பேச நேரமில்லை. அருகாமையில் உள்ளவர்களை உதாசீனப்படுத்திவிட்டு தூரத்தில் இருப்பவரிடம் குசேலம் விசாரிக்கும் அநாகரிகத்தை இந்த நாகரீக வாழ்க்கை கற்றுக்கொடுத்திருக்கிறது. தன் கணவனிடம் / மனைவியிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே Whatsapp / TikTok / Facebookல் உள்ள அனைத்து பெண்/ஆண் நண்பர்களிடம் ஜெபியுங்கள் என்ற பெயரில் தன்னிலை விளம்பரம் கொடுக்கும் அவல நிலை. குழுக்களில் உள்ள பெண்கள் பெயரை / படத்தை கண்டெடுத்து தொடர்பு கொண்டு ஜெபிக்கலாம் வாருங்கள் என்று தன் குழுவில் சேர்ப்பது போன்ற அநாகரீக செயலும் பெருகிவிட்டது. 2பேதுரு 2:18 Whatsapp/TikTok/Facebook Online ஊழியர்கள் இப்போது அதிகம் பெருகிவிட்டார்கள் - கவனம் !! வேதம் வாசிப்பதற்கு நேரமில்லாமல் போனது. இவைகள் சீர் கேடும் சொந்த வாழ்க்கையின் ஆசீர்வாத இழப்பை கொண்டு வருகிறது. விளைவு - அதிக பிரயாசப்பட்டும் குடும்பம் ஆசீர்வாதம் குறைவாக இருப்பதை உணரமுடியும். ஏசா. 17:10-11 உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும். நாம் அவர் வேதத்தை மறந்தால் – அவர் *நம் பிள்ளைகளை* மறந்து விடுவாராம் !! ஓசியா 4:6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். மல். 2:9 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன். ஓசியா 13:6 தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள். Col. 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.  
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக