#269 - ஆனால் மோசே,
தேவனை முகமுகமாய் கண்டான் என்று வேதம் சொல்கிறதே – விளக்கவும்*
*பதில்:*
#254ம் பதில் இதற்கும் பொருந்தும்.
மேலும் யாத். 33:11ல் நீங்கள் குறிப்பிடும் வசனம் வருகிறது.
வசனம் – யாத். 33:11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு,
அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின்
குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்
கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
முகமுகமாய் என்பதன் மூல எபிரேய வார்த்தை பவ்னீம் என்பது.
அதாவது நேருக்கு நேர் / முகத்தை பார்த்து / எதிராக நின்று /
பிரசன்னமாகி / மரியாதையுடன் நின்று / பவ்யமாய் நின்று / கோபத்தோடு எதிர்பட்டு /
காரணத்தோடு கலந்துரையாடல் என்று இப்படி இன்னும் 10க்கு மேற்பட்ட அர்த்தத்தில் இந்த
எபிரேய வார்த்தை வேதாகமத்தில் 2119 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது !! (உதவி : Strong’s Concordance)
யாருமே தேவனை முகமுகமாக காண முடியாது என்கிறது வேதம்.
1தீமோ. 6:16; ஆதி. 32:30; உபா. 5:24;
நியா. 6:22, 13:22; ஏசா. 6:5;
யோ. 1:18; 1தீமோ. 6:16; எபி.
1:13; வெளி. 1:16-17
*அப்படியென்றால் யாத். 33:11ல் வருவது பொய்யா?*
நிச்சயமாக அல்ல – மோசேயும் தேவனை நேருக்கு நேராக பேசினாரேயன்றி
முகத்தை பார்க்கவில்லை – ஆதார வசனம் அந்த அதிகாரத்திலேயே 20-23ம் வசனங்களில் உள்ளது.
*வசனங்கள் கீழே:*
யாத். 33:20 நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
33:21 பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில்
நில்லு.
33:22 என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான்
கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்;
33:23 பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ
காணப்படாது என்றார்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக