செவ்வாய், 9 ஜூலை, 2019

#265 - பிசாசுகளை கட்டுகிறோம், பாதாளத்தில் தள்ளுகிறோம் என்று அனேகர் ஜெபிக்கின்றார்கள் இவை குறித்து வேதம் என்ன சொல்கிறது?

#265 - *பிசாசுகளை கட்டுகிறோம், பாதாளத்தில் தள்ளுகிறோம் என்று அனேகர் ஜெபிக்கின்றார்கள் இவை குறித்து வேதம் என்ன சொல்கிறது?*

*பதில்*:
இவர்கள் ஒரு முறை கட்டிவிட்டோம் என்று சொல்கிற சாத்தானை எப்போது அவிழ்த்து வெளியே விட்டார்கள்?  

ஒவ்வொரு முறையும் சாத்தானை கட்டி ஜெபிக்கிறவர்கள் இந்த கேள்வியை அவர்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அவர்களால் சாத்தானை கட்டமுடியுமென்றால் – மறுபடியும் மறுபடியும் ஏன் கட்டி ஜெபிக்கிறார்கள்? – நிரந்தரமாக கட்டிவிட வேண்டியது தானே?

கிறிஸ்து இந்த பூமியில் ஊழியம் செய்த நாட்களில் பிசாசின் மீது இயேசு கிறிஸ்துவிற்கு இருந்த சர்வ வல்லமையையும் வேதத்தின் வழியாய் நாம் அறியமுடியும். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். (1யோ. 3:8)

ஆனால் - கிறிஸ்துவானவர் சாத்தானை கடிந்து விரட்டினாரேயன்றி – கட்டிபோடவில்லை !!

மேலும் சாத்தான் மீது ஆதி சபையின் நாட்களிலும் எவ்வளவு அதிகாரம் இருந்தது என்று அப். 8:7, 19:12ல் வாசிக்க முடியும்.

அப். 8:7 அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.

அப். 19:12 அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.

அப்போஸ்தலர்களோ சீஷர்களோ ஒருபோதும் சாத்தானை/பிசாசை கட்ட முற்படிவில்லை !!

கிறிஸ்துவின் கட்டளையோ – விரட்ட வேண்டும் என்பதே !!

மத். 10:8 … பிசாசுகளைத் துரத்துங்கள்;
மாற்கு 16:17 …. என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்

நாம் பிசாசுக்கு இடம் கொடுக்கக்கூடாது - எபே. 4:27

எதிர்த்து நிற்கவேண்டும் – எபே. 6:11, யாக். 4:7

பிசாசின் தந்திரங்களை அறியும்படி விழித்திருக்கவேண்டும் – 1பேதுரு 5:8

தாங்கள் என்ன சொல்கிறோம் / செய்கிறோம் என்று அறியாமையில் அநேக சபையாரை தவறாக நடத்தும் - அறியாமையில் இருக்கும் போதகர்களின் வஞ்சக தந்திரங்களில் இதுவும் ஒன்று.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக