திங்கள், 8 ஜூலை, 2019

#264 ஆராதனையில் இசைகருவி உபயோகப்படுத்துவது தவறா?

#264 *கேள்வி : ஆராதனையில் இசைகருவி உபயோகப்படுத்துவது தவறா?*
இசைக்கருவியை தொட்டாலே பாவம் என்பது போல உங்கள் பதிவு #258ற்கான பதிலில் இருந்ததாக உணருகிறேன். பதிலளிக்கவும்

*பதில்*:
இந்த கேள்வியை எழுப்பியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நாம் கிறிஸ்தவர்களாக, கிறிஸ்துவை தலையாக கொண்டிருக்கிறோம்.

அவர் போதனையின் / ஆலோசனையின் / கட்டளையின் படியே அவர் சரீரமான கிறிஸ்தவர்களாகிய நாம் பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறோம்.

கொடிகளாகிய நாம் கிறிஸ்துவாகிய செடியில் இல்லையென்றால் – பிதாவாகிய தேவன் அறுத்துப்போடுவார் (யோ. 15:2)

*இசைக்கருவியை ஆராதனையில் உபயோகபடுத்துவதில் என்ன தவறு?*

புதிய ஏற்பாட்டில் *இசையை* குறித்து கூறப்பட்டவைகளை கீழே கவனிக்கவும்:

1- மத். 26:30 / மாற்கு 14:26 – பாடினார்கள்
2- அப். 16:25 - பாடினார்கள்
3- ரோ. 15:9 – உமது நாமத்தை சொல்லி சங்கீதம் பாடுவேன்
4- 1கொரி. 14:15 – கருத்தோடும் பாடுவேன்
5- எபே. 5:19 – கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணி
6- கொலோ. 3:16 – கர்த்தரை பக்தியுடன் பாடி
7- எபி. 2:12 – சபை நடுவில் உம்மை துதித்து பாடுவேன்
8- யாக். 5:13 – மகிழ்ச்சியாயிருந்தார் சங்கீதம் பாடகடவன்

புதிய ஏற்பாட்டு சபை எங்கும் *இசைக்கருவியை* உபயோகப்படுத்தியதாக காணமுடியவில்லை.

புதுக்கோட்டை மாவட்ட காவலர்களின் இசை பள்ளி இசை இயக்குனரிடமும் பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்தியர் சங்கத்தின் இசை இயக்குனரிடமும் முறையாக நான் இசை பயின்றவன். ஆனால் அதை ஒரு போதும் சபையில் / ஆராதனையில் உபயோகபடுத்தியது கிடையாது.   
 
இசைக்கருவியை தொடுவதோ வாசிப்பதோ கற்றுக்கொள்வதோ கற்றுக்கொடுப்பதோ பாவமல்ல... ஆராதனையில் / தொழுகையில் அதை உபயோகப்படுத்தும் போது நமக்கு வேதம் இடம் கொடுக்கிறதா என்று பார்த்தல் அவசியம்.

ஆறு லட்சம் புருஷர்களை விடவும் தன் சிநேகிதனான மோசேயை விடவும் தன் கட்டளைக்கு கீழ்படிந்த இரண்டு பேரை தான் தேவன் காணான் தேசத்தினுள் நுழையவிட்டார் !!!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக