#263 - *திருவிருந்து பற்றி விளக்கம் தாருங்கள்?*
ஏனெனில் சில சபைகளில் கடைகளில் விற்கப்படுகின்ற
புளித்த மாவினால் செய்த ரொட்டிகளை(bread) பயன்படுத்துகின்றனர். சிலர் வேறுவிதமான சிலவற்றை பயன்படுத்துகின்றனர்
ஆனால் 1 கொரி. 11:24 அப்பம் என்பது அனைவரும் சமமாக
பிட்டு சாப்பிட வேண்டியது என பொருள்படும் வகையில் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே,
அப்பம் என்பது என்ன? என்பதை பற்றி வேதத்தின் படி விளக்குங்கள்
*பதில்*:
திருவிருந்து என்பது ஒரு உடன்படிக்கையை நினைவுகூரும் பந்தி
(லூக். 22:19-20)
வாரா வாரம் அந்த உடன்படிக்கையை நினைவுகூறவேண்டும் (அப்.
20:7)
அப்பம்பிட்குதல் என்றும் இதை அழைத்திருக்கிறார்கள் (அப்.
20:7)
கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும் செயல் இது (1கொரி. 11:24-25)
பிட்கப்பட்ட கிறிஸ்துவின் சரீரத்தை - அப்பம் குறிக்கிறது. (மத். 26:26)
சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தை – திராட்சை ரசம்
குறிக்கிறது. (மத். 26:28)
கிறிஸ்து வருமளவும் இதை செய்ய வேண்டும் – 1கொரி. 11:26
பஸ்கா தினத்தன்று கர்த்தருடைய பந்தி ஸ்தாபிக்கப்பட்டது – ஆகவே
அன்று புளிப்பில்லாத அப்பமே உபயோகபடுத்தப்பட்டது. (மத். 26:17-20)
புளிப்பு – பாவத்தை குறிக்கிறது. (1கொரி. 5:8)
புளிப்பில்லாத அப்பம் – கிறிஸ்துவின் பாவமற்ற சரீரத்தை
குறிக்கிறது.
கிறிஸ்து தன் இரத்தத்தின் மூலம் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். (1கொரி. 11:25)
ஒரே பாத்திரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
வெளி பாத்திரத்தை அல்ல, உள்ளே உள்ளதை
குறிப்பிடுகிறது. (லூக். 22:18-20)
கர்த்தருடைய இராஜ்ஜியத்தில் உள்ளவர்கள் மாத்திரமே பங்கெடுக்கவேண்டும்
(மத். 26:29)
தங்களை தாங்களே பரிசோதித்து இதில் பங்கெடுக்க வேண்டும் (1கொரி.
11:27-30)
கடைகளில் விற்கும் பிரட் – புளிப்பு / ஈஸ்ட் கலந்து தான் எப்போதும்
தயாரிப்பார்கள்.
1கொரி. 5:7 ஆகையால், நீங்கள்
புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப்
பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே
கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக
பலியிடப்பட்டிருக்கிறாரே.
1கொரி. 5:8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல,
துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை
ஆசரிக்கக்கடவோம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக