ஞாயிறு, 7 ஜூலை, 2019

#262 - மெல்கிசேதேக்கை பற்றி விளக்கவும்

#262 - *மெல்கிசேதேக்கை பற்றி விளக்கவும்*

*பதில்*:
மெல்கிசேதேக் –

தேவனுடைய ஆசாரியன் (ஆதி. 14:18, எபி. 7:1)

சாலேம் என்ற ஊரின் இராஜா (ஆதி. 14:18, எபி. 7:1)

நீதியின் இராஜா என்ற அழைக்கப்பட்டார் (எபி. 7:2)

வேதாகமத்தில் மெல்கிசேதேக்கின் தாய் தந்தையை குறித்த விஷயமோ அவரின் வம்ச வரலாறும் சொல்லப்படாதவர் (எபி .7:3)

நியாயபிரமாணத்தின்படி தங்கள் வம்ச வரலாறு இல்லாதவர்கள் ஆசாரியர்களாக இருக்க முடியாது (எஸ்றா 2:62) – ஆனால் நியாயபிரமாண காலத்திற்கு முன்னரே இவர் தேவனுடைய ஆசாரியன் என்று அழைக்கப்பட்டார்.

எவ்வாறு சொல்லப்பட்டாரோ அவ்வாறே திடீரென்று காணாமல் போனார்.  அவரை குறித்த அடுத்த பதிவு ஏறத்தாழ 1000 வருடங்களுக்கு பின்னர் தான் காணமுடிகிறது (சங். 110:4)

கிறிஸ்துவானவர் மெல்கிசேதேக்கின் முறைமையில் ஆசாரியனாக்கப்பட்டவர் (எபி. 7:15-17) இருவருக்கும் உள்ள ஒப்புமையை பாருங்கள்:

1) இராஜாவாகவும் – ஆசாரியனாகவும் இருந்தவர் (சக. 6:13)

2) ஆரோன் - லேவி புத்திரர் வரிசையில் ஆசாரியனாக இல்லாதவர் (எபி. 7:5-6, யாத். 29:9, 29-30, லேவி. 21:13-14)

3) மெல்கிசேதேக் எப்படி துவங்கினார் எப்படி முடித்தார் என்று சொல்லப்படவில்லையோ – கிறிஸ்துவும் ஆதியும் அந்தமுமில்லாதவர் – எபி. 7:3

4) லேவி கோத்திரத்தில் வரும் ஆசாரியர்கள் தங்கள் ஆசாரியத்துவத்தை வாரிசுகளுக்கு கொடுக்கவேண்டும். அந்த முறை மெல்கிசேதேக்கிற்கும் – கிறிஸ்துவுக்கும் இல்லை !!

5) ஆரோனின் ஆசாரியத்துவம் – குறுகியது. நியாயபிரமாண காலத்திற்கு முந்தைய காலத்தின் ஆசாரியனாக மெல்கிசேதேக் இருப்பது போல எந்த எல்கைகும் உட்படாமல் கிறிஸ்துவானவர் – எல்லா ஜனத்திற்கும் பிரதான ஆசாரியனானார்.

நான் மிக சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

எபிரேயர் 7ம் அதிகாரத்தை – முழுவதுமாக பொருமையாய் படித்தால் – மிக தெளிவாக இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளையும் / விளக்கத்தையும் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
 
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

 
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக