#253
கேள்வி:
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக
உள்ள ஜனங்களுக்கு இரட்சிப்பு எப்படி என்று வேதாகமம் சொல்லுகிறது?
பதில்:
முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை
நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள்
வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். எபி 9:15
பூமிக்கு வந்து பாவநிவாரண பலியாக தான் மரித்த பின் உள்ளவர்களின்
பாவங்களை மன்னித்தது மாத்திரமல்லாமல் முன்பதாக உள்ளவர்களின் பாவங்களுக்காகவும்
மரித்ததாக எபிரேய ஆக்கியோன் வெளிபடுத்துகிறார்.
எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள்
நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள்
நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். ... அன்றியும்
நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது,
நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே
நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச்
சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று
அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற
கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என்
சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு
மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது
விளங்கும் (ரோ 2:12-16)
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை
நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும்
ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே
ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். (கலா 3:8-9)
நன்றி
Eddy
Joel
+968
93215440 / joelsilsbee@gmail.com
- கேள்வி & வேதாகம பதில்கள்
- நீங்களும் இணைந்து கொள்ள:
Group 1:
Group 2:
** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில்
காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக