திங்கள், 10 ஜூன், 2019

#213 - பொருத்தனை பண்ணலாமா? கூடாதா? பைபிள் ரீதியாக விளக்கவும்

#213 - *பொருத்தனை பண்ணலாமா? கூடாதா? பைபிள் ரீதியாக விளக்கவும்*

*பதில்*:
பொருத்தனை என்ற வார்த்தைக்கு அர்த்தம் – வாக்குறுதி.

வாக்கு தவறாமை கிறிஸ்தவர்களுக்கு அவசியம் (யாக். 3:2)

உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் (மத். 5:37)

ஆகாதவன் அவன் (உத்தமன்) பார்வைக்குத் அற்பமானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம் பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். (சங். 15:4)

மோசேயின் பிரமாணத்தின்படி ஒருவர் பொருத்தனையை செய்துவிட்டு அதை நிறைவேற்றாவிட்டால் குற்றம் (லேவி. 5:4-5)

தேவன் *தன் கட்டளைகளுக்கு* செவி கொடுக்க வேண்டும் என்று கட்டளை கொடுத்திருக்கிறார்.

நாம் ஒன்றை நினைத்து கொண்டு நிறைவேற்ற முடியாததை பொறுத்தனை என்று சொல்லி பாவத்தை ஏன் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும்?

நமக்கு என்ன நடக்க வேண்டுமோ அதை தேவனுடைய சித்தத்திற்கு விட்டு விடவேண்டுமேயன்றி *”இது கிடைத்தால் அதை தரலாம் அல்லது அதை செய்யலாம்”* என்று தேவனிடத்தில் நாம் பேரம் பேசக் கூடாது. (லூக். 22:42)

ஊழியத்தின் தேவை, ஏழைகளுக்கு உதவுதல், திக்கற்றவர்களுக்கு உதவுதல் என்று எதையாகிலும் செய்யவேண்டும் என்று மனதில் பட்டால் – யோசிக்காமல் செய்து விட வேண்டும் – 

– நமக்கு அதன் பலனை நிச்சயம் அவர் அளிக்கிறவர் (ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் – நீதி. 19:17

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக