#206 - *கிறிஸ்துவில் ஞானஸ்நானம் எடுத்தவர்கள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்றால் ஞானஸ்நானம் எடுத்து விட்டு பாவம் செய்யலாமா?* இல்லைன்னா ஞானஸ்நானம் எடுத்தவர்கள் எத்தனை பேர் பாவம் செய்யாமல் இருக்கிறார்கள்? அவர்கள் எங்கே செல்வார்கள்?
*பதில்*:
இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்; அவராலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோ 14:6
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப் 4:12)
யாக் 5:16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்...
1யோ 1:8-9 நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் அறிந்து செய்த பாவத்தை விட்டு மனந்திரும்பாத பட்சத்தில் அவர்களும் பரலோகம் போவது அரிதே !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
ஞாயிறு, 9 ஜூன், 2019
#206 - கிறிஸ்துவில் ஞானஸ்நானம் எடுத்தவர்கள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்றால் ஞானஸ்நானம் எடுத்து விட்டு பாவம் செய்யலாமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக