வியாழன், 9 மே, 2019

#143 - ஆராதனை vs தொழுகை - விளக்கம் தருக?

#143 - *ஆராதனை vs தொழுகை - விளக்கம் தருக?*

*பதில்:*
பலருக்கு இந்த கேள்வி உண்டு.

ஆங்கில வேதாகமத்தில் Service என்றும் Worship என்றும் வரும் அநேக இடங்களில் தமிழ் வேதாகமத்தில் ஆராதனை என்றே போடப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு:
Exo 3:12 அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

Exodus 3:12
(BBE)  And he said, Truly I will be with you; and this will be the sign to you that I have sent you: when you have taken the children of Israel out of Egypt, you will give worship to God on this mountain.

(KJV)  And he said, Certainly I will be with thee; and this shall be a token unto thee, that I have sent thee: When thou hast brought forth the people out of Egypt, ye shall serve God upon this mountain.

ஆபாத் என்கிற எபிரேய வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழில் சேவை என்று பொருள்படுகிறது.

தமிழ் அகராதியில் ஆராதனை என்ற வார்த்தைக்கு : 
நாளின் கடைசி ஆராதனை; துயில் கொள்ளும் முன் ஓவம் செபம்; விக்கிரக ஆராதனை செய்பவர்; மகம்;  ஓமகுண்டம்; இறந்தவர்களை பூஜிக்கிறது; இறந்த சன்னியாசிகளுக்கு வருஷந்தோறுஞ் செய்யும் சடங்கு என்று போடப்பட்டிருக்கிறது 

ஆதாரம் : 


தமிழ் வேதாகமத்தை மொழிபெயர்த்ததில் சமஸ்கிருதம் படித்த பண்டிதர்களின் பங்கு அதிகமாகையாலோ என்னவோ 103 முறை ஆராதனை என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

தொழுகை என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தங்கள்:

பிரார்த்தனை; சேவை; வணக்கம்; சங்கை; பணிவு
இறைவனை, இறைவியை வணங்குதல்; வழிபாடு;

ஆகவே 1கொரிந்தியர் 13:11ம் வசனத்தின் படி – வளர்ந்தவர்களாகிய நாம் உபயோகபடுத்தும் வார்த்தைகளை அர்த்தத்தோடு பயன்படுத்தவேண்டும்.

1Co 13:11 நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.

தொழுகை என்ற வார்த்தையை உபயோகிப்பது தான் சரி.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக