#144 - *தேவன் என்னுடன் வசனம் மற்றும் சொப்பனங்கள் மூலம் நிறைய முறை பேசுயிருக்கிறார். ஆனால் அந்நியபாஷையில் நான் பேசினதில்லை. எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உள்ளதா?*
*பதில்:*
*உங்களது கேள்வி - 1) கர்த்தர் என்னுடன் வசனம் மற்றும் சொப்பனங்கள் மூலம் நிறைய முறை பேசுயிருக்கிறார்*.
முதல் நூற்றாண்டில் மனிதர்களோடு நேரடியாக தேவன் தொடர்பு கொள்வதற்கு ஒரு காரணம் இருந்தது. மேலும் அவைகள் துல்லியமாக நமக்கு வந்தடைய வேண்டுமென்பதில் திண்ணமாய் இருந்திருக்கிறார் (மத். 24:35, 2 பேதுரு 1:15)
வேதவாக்கியங்களில், இன்றைய மனிதனுக்கு தேவனுடைய முழுமையான சித்தத்தை / திட்டத்தை / நாம் பெற்றுள்ளோம் என்பதை அறிகிறோம் (யோ. 20:30-31, 2 தீமோ. 3:16-17).
பரிசுத்த ஆவியானவர் "சகல சத்தியத்திற்குள்ளும் அவர்களை வழிநடத்துவார்" என்று அவருடைய அப்போஸ்தலர்கள் வாக்குறுதி அளித்தார்கள். (யோ. 16:13)
முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எல்லா சத்தியமும் வெளிபடுத்தப்பட்டிருந்தது.
ஜனங்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லியாயிற்று. இனி ஒரு காரியத்தை தேவன் எனக்கு சொல்ல சொன்னார் என்று ஒருவர் சொல்வாராகில் – வேதாகமத்தில் சொல்லப்பட்ட வசனங்களுக்கு முரணாயிருக்குமே (1கொரி. 4:6, வெளி. 22:18-19, உபா. 29:29)
சொப்பனங்களிலும், போகையிலும் வருகையிலும் நமக்கு வசனங்கள் நினைவுக்கு வருவது சந்தோஷமான காரியம். ஆவியானவர் நமக்கு உணர்த்துவிக்கிறார்.
ஆனால் – வேதாகமத்தில் பதியப்படாத ஒன்றை அவர் வெளிபடுத்தவே மாட்டார் (யோ. 16:13) .
*உங்களது கேள்வி - 2) ஆனால் அந்நியபாஷையில் நான் பேசினதில்லை.*
அந்நிய பாஷையில் பேச விரும்புவது சந்தோஷம்.
தமிழ் அல்லாத மக்களிடையே சத்தியத்தை எடுத்து செல்லமுடியம்.
தேவ கிருபையால் கடந்த 20 வருடமாக நான் 4 அந்நிய பாஷைகளில் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், அரபி மொழிகளில் பேசுகிறேன். ஆகவே இப்படிபட்ட ஜனங்களிடம் தேவ மகத்துவங்களை எடுத்து சொல்ல பிரயோஜனமாயிருக்கிறது.
வேதத்தில் அந்நிய பாஷையில் பேசினவர்கள் தேவ மகிமையை எடுத்து சொன்னதை மற்றவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பார்க்கிறோமே !! (அப். 2:11, 10:45)
கூடிய விரைவில் புதிய மொழிகளை கற்றுக்கொள்ளும்படி ஊக்கப்படுத்துகிறேன்.
*உங்களது கேள்வி - 3) எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உள்ளதா? விளக்கவும். ஐயா நன்றி!!!*
தேவனுடைய வார்த்தையை கேட்டு
விசுவாசித்து
மனந்திரும்பி
விசுவாசத்தை அறிக்கையிட்டு
பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் யாரொருவர் பெற்றுக்கொள்கிறாரோ
அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் வரமாக தந்தருளப்படுகின்றார் - அதில் எந்த மாற்றமுமில்லை. (அப். 2:38, 22:16, மாற்கு 16:16)
ஞானஸ்நானம் எடுக்கும்போது நீங்கள் மேற்சொன்னவாறு உணர்ந்து எடுத்திருந்தால் நிச்சயமாக பரிசுத்த ஆவியை பெற்றிருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் அப்படி இதுவரைக்கும் எடுக்காவிடில் தேவ சத்தியம் முறையாய் அறிந்தவரிடத்தில் சேர்ந்து சத்தியத்தை அறிந்து ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் எடுத்துக்கொள்வது உசிதமானது.
அப். 19:2-5 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இந்த அருமையான கேள்விக்காய் நன்றி
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக