#182 *கேள்வி:பிதாவை
ஆதாம் நேரில் பார்த்ததுண்டா?*
*பதில்:*
யோ. 6:46ன் அடிபடையில் இந்த கேள்விக்கு
உடனே பதிலளித்து விட மனம் வந்தாலும் – கொஞ்சம் ஆழமாக இந்த அருமையான கேள்விக்கு வேதத்தை
ஆராய்வது அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வேதத்தில் தேவன் என்று வருகிற வார்த்தை
எல்லாம் ஒருமையல்ல.
ஆதி. 1:1ல் – தேவன் என்பது பன்மையை
குறிக்கிறது. இப்படி 2601 முறை வேதத்தில்
தேவன் என்கிற வார்த்தை பன்மையில் வருகிறது !!
யோ. 6:46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
யோ. 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
1யோ. 4:12 தேவனை
ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை;
யாத். 33:20 நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு
மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
ஆதி. 3:8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே
தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது
ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே
ஒளித்துக்கொண்டார்கள் என்கிறது வசனம். அதாவது ஆதி 3:8ன்படி – அவர் சத்தத்தை
கேட்டார்கள்.
“அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும்
தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்” என்று தமிழாக்கத்தில்
இப்படியாக வந்தாலும் .... எபிரேய மூல மொழியின் அர்த்தத்தில் Adam and his wife hid themselves from the presence of the LORD God amongst the trees of the garden என்று
பார்க்கிறோம் – அதாவது மரங்களினூடே தேவனுடைய பிரசன்னத்திலிருந்து ஒளிந்து கொண்டார்கள்
என்கிறது. தேவனிடத்திலிருந்து அல்ல – தேவனுடைய பிரசன்னத்திலிருந்து !!
ஆதாம் ஏவாள் - பாவம் செய்வதற்கு முன்னர்
இது சாத்தியமா என்று யோசிக்க உபா. 29:29 இடம் கொடுக்கவில்லை.
** நல்ல கேள்வி
!!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக