Daily Dose லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Daily Dose லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

Daily Dose 01-Aug-2019

தேவ கிருபை நம்மை ஆள்வதாக.

இது சரியில்லை அது சரியில்லை என்று சதா கஷ்டங்களையும் கற்பனைகளையும் பிணைத்து வைத்தால் மிஞ்சுவது கோபமும், வெறுப்பும், ஏமாற்றமும் தான்.

புலம்பல் புஸ்தகத்தை எழுதிய எரேமியா தீர்க்கன் கூட – புதிய காலையில் புதிய கிருபை என்று நினைவு கூறுகிறார். (புலம்பல் 3:23)

நாம் செய்த கொடுமையான தவறுகளை கூட தேவன் மன்னித்து, மறந்து புதிய கிருபையை கொடுக்கும் போது, மனிதர்களான நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு போட்டி, பொறாமைகள், வீண் கற்பனைகளை வளர்த்து விரோத்திக்கிறோம் !!

நமக்கு முன்னர் தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்து விடாதபடி பிசாசு தந்திரக்காரனாய் இருதயத்தின் எண்ணங்களை பிணைத்து விடுகிறான்.

தேவனிடத்தில் முழுவதுமாய் தாழ்த்தி ஒப்புகொடுத்தல் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் வருவிக்கும்.

*கேள்வி & வேதாகம குழுவில் இணைந்து கொள்ளுங்கள்*. https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

*எடி ஜோயல்*
கணியாகுளம் கிறிஸ்துவின் சபை
உலக வேதாகம கல்லூரி ஆசிரியர்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

May the Grace of our Lord rule us.

Finding fault in this and that connecting every imagination and difficulties will result in anger, enmity and disappointment only.

Even Jeremiah the prophet who lamented in his peak sorrowness, he remembers every new day comes with New Grace from the Lord. (Lam 3:23)

When our Father God gives New Grace everyday though we did nasty sins against Him, being  humble human can we not wither off the enmity & vain imaginations against others?

Understand It is purely satan’s trap that to stop you from enjoying God’s blessings kept before you.

Humble and Submit completely before God which will yield happiness and peace.

*Eddy Joel*
Preacher - Kaniyakulam Church of Christ
Teacher - World Bible School
+968 93215440
Print Friendly and PDF

புதன், 31 ஜூலை, 2019

Daily Dose 31-7-19

சாந்த சொரூபியாகிய நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கூப்பாடு போட்டு ஆரவாரம் செய்தால் தான் நம்மை இந்த உலகம் திரும்பி பார்க்கும் என்று எப்போதும் தன் நிலைமையை பரப்பி கொண்டே இருப்பார்கள் சிலர்.

செய்ய வேண்டிய காரியத்தை செவ்வனே செய்து முடித்தால் அதற்குரிய பங்கை ஆண்டவர் பரலோகத்திலிருந்து நமக்கு அனுப்பி வைப்பார்.

மனுஷர் தயவை நாடினால், தேவன் ஒதுங்கி விடுவார்.

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். மத் 5:5

*கேள்வி & வேதாகம குழுவில் இணைந்து கொள்ளுங்கள்*. https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

*எடி ஜோயல்*
கணியாகுளம் கிறிஸ்துவின் சபை
உலக வேதாகம கல்லூரி ஆசிரியர்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Wishing you in the name of our Saviour Jesus Christ, the King of Peace.

To get the world’s attention people use to keep themselves very active under limelight.

But, doing what is required even under the roof will yield the result from the hands of our Lord in Heaven.

Seeking men’s grace will keep God away.

"Blessed are the meek, for they shall inherit the earth (Mt 5:5)

*Eddy Joel*
Preacher - Kaniyakulam Church of Christ
Teacher - World Bible School
+91 8144 77 6229
Print Friendly and PDF

செவ்வாய், 30 ஜூலை, 2019

Daily Dose 30-7-19

உபத்திரவத்தின் மத்தியிலும் நம்மை பெலப்படுத்தும் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.

சத்தியத்தை பற்றிக்கொண்டு உத்தமமாய் இருந்த யோபுவின் மீது பிசாசு கண் வைத்தான்.

பிள்ளைகள், சொத்துக்கள், வேலையாட்கள், மிருகஜீவன்கள் என்று எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் யோபு இழந்தார். (யோபு 1)

சொந்த சரீரமும் அருவருக்கத்தக்க பருக்களால் நாசமானது. 

மனைவியாவது ஆறுதலாய் இருந்திருக்கலாம்... புருஷன் இனி பிரயோஜனம் இல்லை என்று நினைத்தாள் போலும்...
அவள் பங்கிற்கு யோபுவை பார்த்து *ஜீவனை விடும்* என்று சொல்லி யோபுவின் இருதயத்தில் ஈட்டியை பாய்ச்சினாள் (யோபு 2:9)

தேவனுக்கென்று நாம் நிற்கும் போது, நிந்தைகளும் அவமானங்களும் வரும். சொந்த கணவனும், சொந்த மனைவியும் கூட வெறுக்கலாம்.

ஆனால் - ஒருபோதும் உண்மையை – ஆண்டவர் வெட்கப்படுத்த மாட்டார்.

நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். (1பேது 2:20)

விசுவாசத்தை விட்டு விடாதிருங்கள். நிச்சயம் தேவன் ஜெயத்தை தருவார்.

*Q&A Biblical நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்*. இது வரை 270க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. கேள்வி பதிலை தவிர வேறு எதுவும் அந்த குழுவில் இடம்பெறாது !!  Group#2 : https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

My wishes and greetings to you in the name of our Lord Jesus Christ who strengthens us even in the midst of tribulations.

Satan eyed on Mr.Job who was upright and obedient to God.

He lost his children, wealth, servants, animals… all one by one continuously. (Job 1).

Even his own body was targeted with sore boils.

Atleast, his wife could be of console… she seems like her husband is no longer useful and she pierced Job’s heart telling him to die… (Job 2:9)

When you stand for the Lord, you will face all sort of reproaches and abuse.
May be even your own husband or wife may do so.

God will never let the truth go down.

What credit is it if, when you have done evil, you take your punishment quietly? but if you are given punishment for doing right, and take it quietly, this is pleasing to God. 1 Peter 2:20

Hold on your faith.. God will surely get the victory for you.

*Eddy Joel*

Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Print Friendly and PDF