*பெருகிக்கொண்டிருக்கும் விஷக் கனிகள்*
by : Eddy Joel Silsbee
பாதுகாத்து அரவணைத்து வழிநடத்தும் தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.
நம் காலத்தில் எப்போதும் பார்த்திராத நிலைமைக்கு சமுதாயத்தின் நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது.
பெண்களுக்கு சமுதாயத்தில் ஆபத்து பெருகிக்கொண்டேயிருக்கிறது.
எந்த ஒரு தவறானக் காரியத்தையும் தட்டிக் கேட்பதற்கு பதிலாக கொடுமை நடக்கிறது என்று படம் பிடித்து மற்றவருக்கு அனுப்பும் கலாச்சாரம் பெருகிவிட்டது.
மனிதனுக்கு இல்லாத முக்கியத்துவம் மிருகத்திற்கு கொடுக்கப்படுகிறது.
சுய புத்தி இல்லாமல் சுய நலனோடு இருக்கும் அதிகாரிகள்.
தன் பிரிவு பெரிது என்றும் மற்றப் பிரிவினர்களை விரட்டுவோம், கொல்லுவோம் என்று வெளியரங்கமாய் பறைசாற்றும் மேடை பேச்சாளர்களை பார்த்துக்கொண்டு கைக்கட்டி நிற்கும் அதிகாரிகள்.
வருங்கால சமுதாயத்தை சீர்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது என்பதை நான் உணரவேண்டும்.
தனக்கு பிரிதிநிதித்துவம் வேண்டும் என்ற சுயநலத்தில், கிறிஸ்தவத்திற்கே எதிரான கொள்கையுடையவர்களுடன் கைக்கோர்த்துக்கொண்டு வேஷம் போட்ட பாஸ்டர்கள்!!
*ஒலிவ மரத்தையும் அத்தி மரத்தையும் ஜனங்கள் தள்ளி, முள் மரம் என்று தெரிந்தும் தேர்ந்தெடுத்ததின் விளைவு*. நியா. 9:8-15
*நூதன தேவர்களைத் தெரிந்து கொண்டதால்; யுத்தம் வாசல்வரையும் வந்திருக்கிறது*. நியா. 5:8
துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும். நீதி. 25:26
கிறிஸ்தவன் முழங்கால் படியிட்டு ஜீவனுள்ள தேவனிடத்தில் முறையிடும் போது, தேவன் சொன்ன வார்த்தை இதோ:
“நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்”. 2இரா. 22:19
சகல அழுக்கையும் சுமந்துக்கொண்டே ஸோத்ரம் அல்லேலூயா என்று எப்படிக் கதறினாலும் மேடை போட்டு ஆயிரங்களை இணைத்துக் கதறினாலும் பிரயோஜனமில்லை !!
ஆம், தவறுகளை உணர்ந்து, சிந்தனையை சீர்தூக்கி, களைகளை அடையாளம் கண்டு, அவைகளைக் களைந்து, சத்தியத்திற்கு திரும்பி பின்பு, தேவனை நோக்கி தேசத்துக்காகவும், ஜனங்களுக்காகவும், எதிர்கால சந்ததிக்காகவும் கதறுவோம்.
நம்மை உருவாக்கின தேவன் சகலத்தையும் மாற்ற வல்லவர்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக