புதன், 29 மே, 2019

#183 - ஆத்மா என்பது மனிதனுக்கு மட்டும் தானா இல்லை மிருகங்களுக்கும் உள்ளதா ??

#183 - *ஆத்மா என்பது மனிதனுக்கு மட்டும் தானா இல்லை மிருகங்களுக்கும் உள்ளதா??*

*பதில்:*
சரீரம் என்பதில் யாருக்கும் சந்தேகமே கிடையாது.
ஆவி – ஆத்துமா என்று வரும்போது சில வேளைகளில் சிறிய தயக்கம் வந்து விடுகிறது.

1)
ஆவி என்பது – காற்று என்று பொருள் (மூல எபிரேய பாஷையில்)
Hebrew : ruwach and neshamah
Greek : pneuma

* மனிதன் – தேவனுடைய ரூபத்தில் உருவாக்கபட்டான் (ஆதி. 1:26-27)

* தேவன் ஆவியாயிருக்கிறார் – யோ. 4:24

* மனிதனுக்குள் ஆவியை தேவன் உண்டாக்குகிறார் (சகரியா 12:1)

* மனிதன் மரித்தவுடன் ஆவி – தேவனிடத்தில் திரும்பி விடுகிறது (பிர. 12:7)

2)
ஆத்துமா என்பது – வாழ்க்கையை (Life) குறிக்கிறது
Hebrew : nephesh
Greek : psuche

மத். 2:20 – ஆத்துமா என்கிற வார்த்தை – பிராணன் என்றும் வாழ்க்கை என்றும் வருகிறது.

லேவி. : 17:11ல் அதே வார்த்தை வாழ்ககையையும் ஆத்துமாவையும் குறிப்பதை கவனிக்கவும் (ஆங்கில மொழிபெயர்ப்பு)

கவனிக்க வேண்டியவை:

உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? (பிர. 3:21)

இந்த வசனம் கேள்வியாக இருந்தாலும் – நாம் தேவனுடைய ரூபத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம் – மனிதன் இறந்ததும் – ஆவி தேவனிடத்தில் மேலே திரும்பி விடுகிறது !!

நம் சரீரம் மண்ணுக்கு போய்விடுகிறது.
மிருகங்கள் மரித்ததும் (தாழ) பூமியில் / மண்ணுக்குள் போய்விடுகிறது.

ஆத்துமா என்பது – வாழ்க்கை / வாழ்வு.
ஆவி என்பது – தேவன் நமக்கு கொடுத்தது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக