ஞாயிறு, 19 மே, 2019

#165 - இரண்டு (2) சபைகளில் பந்தி எடுக்கலாமா?

#165 - *இரண்டு (2) சபைகளில் பந்தி எடுக்கலாமா?*
என் பெயர் xxxxx ...நாங்கள் குடும்பமாக ஒரு சபைக்கு சென்றுவந்தோம் 5 ஆண்டுகளாக அந்த சபையில் ஞானஸ்நானம் பெற்று கர்த்தருடைய பந்தியில் பங்குபெற்றுவந்தோம். தந்தையாரின் உடல்நல கோளாறுகளின் நிமித்தமாக வீட்டிற்கு அருகாமையில் உள்ள சபைக்கு செல்கிறோம் பழைய சபையின் போதகரின் அனுமதி பெற்று அவர்கள் மாதம் ஒருமுறை திருவிருந்து பெற சபைக்கு வரச்சொல்கிறார்கள் முதலாம் வாரத்தில் நாங்கள் இப்பொழுது செல்லும் சபையில் திருவிருந்து இரண்டாம் வாரம்... இங்கும் பந்தியில் கலந்துக்கொள்கிறோம். கேள்வி என்னவென்றால் இரண்டு சபையில் திருவிருந்து எடுக்கலாமா என்பதே.

*பதில்:*
வேதாகமத்தின் படி வாரத்தின் முதல் நாளில் (ஞாயிறு) கர்த்தருடைய பந்தி எடுக்க வேண்டும். (அப். 20:7)

நீங்கள் ஐக்கியம் கொள்ளும் எந்த சபையும் – கிறிஸ்துவின் போதனையை மாத்திரம் பின்பற்றுகிறார்களா என்று அறிந்து ஐக்கியம் கொள்ளவும்.

கர்த்தருடைய பந்தி – அவரின் மரணத்தை நினைவு கூறுவதற்காக (1கொரி. 11:25)

காணிக்கை வசூலுக்காகவோ, சபை உறுப்பினர் புதிப்பித்தலுக்கான சடங்கோ அல்ல.

நன்றி

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக