புதன், 15 மே, 2019

#155 - மாதாந்திர கூட்டம் நடத்தலாமா?

#155 - *மாதாந்திர கூட்டம் நடத்தலாமா?* மாதத்தின் முதலாம் நாளிலே அதிகாலையில் ஸ்தோத்திர கூட்டம் ஒன்றினை கிறிஸ்துவின் சபையார் தற்போது ஒழுங்கு செய்கிறார்கள். மேலும்  அந்நாளிலே விசேஷித்த காணிக்கைகளையும் சபையார் இடத்தில் வாங்குகிறார்கள். மார்க்க பிரிவினரை பார்த்து இவ்வண்ணமாக செய்கிறார்கள். உபதேசத்தின்படி இது சரியா இதற்கு புதிய ஏற்பாட்டில் ஆதாரம் உண்டா. தயவுகூர்ந்து பதில் அளிக்கவும்..

*பதில்:*
ஏசாயா 1ம் அதிகாரம் 13-14ம் வசனத்தில் உங்கள் மாதபிறப்பு கூட்டங்களை வெறுக்கிறேன் என்று பார்க்கிறோம். ஆனால் மூல மொழியாகிய எபிரேய வேதாகமத்தில் இந்த வசனம் *அமாவாசை பவுர்னமி* கூட்டங்களை குறிக்கிறது.

அப். 2ம் அதிகாரம் 46ம் வசனத்தில் (கிறிஸ்தவர்கள்) தேவாலயத்தில் அநுதினமும் தரித்திருந்தார்கள் என்று பார்க்கிறோம்.

மாதாமாதம் முதல் தேதியில் ஒன்று கூடி ஜெபிப்பதை பாரம்பரியம் என்று நாம் நினைக்காமல் அதை ஜெபவேளையாக ஆதாயப்படுத்திக்கொள்வதில் தவறாக வேதாகமத்தில் சொல்லப்படவில்லை.

வாரத்தின் முதல் நாளில் நிச்சயம் ஆராதிக்க வேண்டும். (அப். 20:7).
ஆனால், வாரத்தின் முதல் நாளில் கூடாமல் மாதத்தின் முதல் நாளுக்கு ஒருவர் முக்கியத்துவம் கொடுத்தால் – அது தவறு மற்றும் வேதத்திற்கு முரண்.

வாரத்தின் முதல் நாளில் கூடின போது பணம் சேகரித்தார்கள் என்று வேதாகமத்தில் 1கொரி. 16:2ல் பார்க்கிறோம் – இதை தர்ம பணம் என்றும் பார்க்கிறோம் (வ1)

மற்ற நாட்களில் கூடின போது காணிக்கை வாங்கியதாக வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் நாம் காணமுடியாது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக