திங்கள், 1 ஏப்ரல், 2019

#81 - மரணத்துக்கு ஏதுவான பாவம் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் விளக்கவும்

#81 - *மரணத்துக்கு ஏதுவான பாவம் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்* - விளக்கவும்  1 யோவான் 5 :16

*பதில்*:
மரணத்துக்கு ஏதுவான பாவம் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் என்று 2 விதமான பாவத்தை குறித்து யோவான் அப்போஸ்தலன் கூறுகிறார்.

*எது மரணத்திற்கு ஏதுவான பாவம்*?
1- சத்தியத்தை தெரிந்த பின்னரும் தங்கள் கொள்கையையே பற்றிக்கொண்டிருப்பது – மறுபடியும் அவர்களை புதிப்பிக்கிறது கூடாதகாரியம் !! (எபி. 6:4-6)
2- தேவனாலே எச்சரிக்கப்பட்டும் தீவிரமாய் கோராகு செய்த மீறுதல். எண். 16:1-35
3- உறுதியாய் எச்சரிக்கபட்டும் – வேண்டுமென்றே மீறுவது – எண். 15:30-31
4- விருப்பத்தோடு செய்யும் பாவங்கள், மறுபடியும் மனந்திரும்ப / தேவனிடத்தில் வர ஏதுவல்லாமல் போவது. எபி. 10:26-31
5- தேவனுடைய வார்த்தை போதிக்கப்பட்டும் மறுபடியும் மீறுகிறவர்கள், மனந்திரும்ப மறுக்கிறவர்கள் – எபி. 10:26-31

பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்கிறார் பவுல் (ரோ. 6:20-23)
எல்லா பாவமும் மரணத்திற்கு எடுத்துசெல்வதாக இருக்கிற போதிலும் – தன் தவறை உணர்ந்து மனம்திரும்பும் போது எவரும் இரட்சிக்கப்படுகிறார்கள்.

சத்தியத்தை அறிந்தும்,
எது தேவ திட்டம் என்று உணர்த்துவிக்கப்பட்டும்,
எது தவறானவை,
எது வேதத்திற்கு புறம்பானவை,
எது மனித போதனை,
கற்பனையான திட்டங்கள் இன்று சபைக்குள் மனிதர்களால் புகுத்தப்பட்டது எது என்று அறிந்த பின்னரும்
அவைகளிலே பிரியத்தோடு நடப்பிக்கும் போது – அவர்களை மரணத்தினின்று விடுவிப்பது கூடாத காரியம்.

*மரணத்திற்கு ஏதுவல்லாத பாவம்*: (கிறிஸ்தவர்களுக்கு)
நாம் செய்யும் / செய்து கொண்டிருக்கும் பாவத்தை / தேவகட்டளைக்கு மாறான தவறுகளை செய்வதை நிறுத்தி / புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு உடன்பட்டு / உணர்ந்து, பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பி சத்தியத்திற்குள் வரும்போது – அவை மன்னிக்கப்படுகிறது (1 யோ. 1:8-10,  1 யோ. 2:1-2)

மெஜாரிட்டிக்கு பின்னாக போகாமல், சொந்த கற்பனைகளுக்கு இடங்கொடுக்காமல், நம்முடைய தப்பிதங்களை உணர்ந்து தேவனிடத்தில் மன்னிப்பு கோரும்போது – அவர் நம் பாவங்களை மன்னிக்கிறார் – யாக். 5:15-16, எபி. 8:10-12

* *பாவிகளை தண்டிப்பது தேவனுடைய சித்தம் அல்ல – அவர்கள் மனந்திரும்ப வேண்டுமென்றே பிரியப்படுகிறவர். (2 பேதுரு 3:9)* *

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக