சனி, 6 ஏப்ரல், 2019

#91 - கானானிய பெண்ணிடம் ஆண்டவர் ஏன் நாய்குட்டிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்?

#91 - *கானானிய பெண்ணிடம் ஆண்டவர்  ஏன் நாய்குட்டிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்?* எதற்கு உதவ மறுத்தார்? பின்பு எப்படி உதவினார்?..... கட்டளையை மீறினாரா?... 

*பதில்*:
வசன ஆதாரம்:
மத். 15:26 அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

யூதர்கள் தங்களை தேவனுடைய பிள்ளைகள் என்றும் மற்ற அனைவரையும் நாய்கள் என்று சொல்லி அவர்களை இகழ்வது அவர்கள் சுபாவம்.

உண்மையான தேவனை தொழுது கொள்வதை விட்டு புத்தி இல்லாமல் விக்கிரகத்தை ஆராதிப்பதால் இப்படி அவர்கள் அழைப்பது மரபு.

அப்படிப்பட்டவர்களுடைய பிரசன்னமே (யூதரல்லாதவர்களுடைய) தேவனுடைய வழிபாடுகளில் தங்கள் மத்தியில் அசுத்தமானவை என்று கருதுபவர்கள் (யோ. 18:28)

a. இப்படிபட்ட அவர்களுடைய பல எண்ணங்களை கிறிஸ்துவின் ஊழியம் வெளிகொணர்வதும் அதற்கான கண்டனங்களை இவர் தெரிவிப்பதும், யூதர்களை இயேசுகிறிஸ்துவானவர் உணர்த்துவதுமாக இருந்தது. (மத். 11:19, யோ. 4:9-10)

b. இஸ்ரவேலர்களின் எல்லையை விட்டு புறஜாதிகளின் எல்லையான தீரு சீதோன் பட்டனங்களுக்குள் பிரவேசித்த போது தான் இந்த கூற்றை இயேசுவானவர் பயன்படுத்துகிறார் (மத். 15:21)

c. அந்த புறஜாதி (கானானிய) பெண் தன்னுடைய மகளின் சுகம் வேண்டி இயேசு கிறிஸ்துவை பின்தொடர்வதை கூடஇருந்தவர்கள் விரும்பாமல் அவளை வெளியே அனுப்பும்படி இவரை கேட்கின்றனர் !! (மத். 15:23)

d. கிரேக்க பாஷையில் நாய் என்று அல்ல நாய்குட்டி என்று வருகிறது. நாய் என்று அவர் யாரை சூசகமாக சொன்னாரோ?

e. தன் ஊழிய நாட்களில் – தன்னை சுற்றி விருதாவாய் வந்தவர்களை எப்போதும் மறைமுகமாவும் நேரடியாகவும் தாக்கி அவர்களின் தவறான பாதையை இயேசு விளக்கினது அதிகம் ....  

** கிறிஸ்தவம் என்ற பெயரில் தவறான போதனையால் கிறிஸ்தவ மதமாக கிறிஸ்தவ வியாபாரிகளிடத்தில் அலைக்களிக்கப்படுகிறது என்று எவ்வளவு எடுத்து சொன்னாலும் யார் காதிலும் எப்படி விழுவதில்லையோ – அப்போதும் இயேசு கிறிஸ்துவே நேரடியாக சொன்ன போதும் இந்த ஜனங்கள் விழுந்துபோனதை கவனிக்க முடிகிறது.

f. சிலுவை மரணத்திற்கு முன்னர் வரை கிறிஸ்துவின் பிரதான நோக்கம் – *இஸ்ரவேலின் இரட்சிப்பு*.. (மத். 15:24, 10:5-6, ரோ. 15:8-9 )

g. தன்னுடைய பிரதான நோக்கத்தை அவள் தெளிவாக உணர்ந்திருந்தாள் என்று அறிந்ததாலே – அவளுக்கு இரங்கினார் (மத். 15:27-28)

கூட நின்று கொண்டிருப்பவர்களுடைய மனநிலமையை மாற்றும் பொருட்டு அவர்களை உணர்த்துவிக்க பயன்படுத்தியது பாடம் இது.

இயேசு கிறிஸ்து எவரையும் புறக்கணிக்கவோ தரக்குறைவாக நடத்தினதோ கிடையாது. மாறாக, தாழ்மையானவர்களுக்கும் திக்கற்றவர்களுக்கும் வியாதியஸ்தருக்கும் தாமாகவே இரங்கினவர்.

அவர் அநேக அற்புதங்கள் புறஜாதியினிடத்தில் செய்திருக்கிறார் (மத். 8:5-13, யோ. 20:30…)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக