#90 கேள்வி : கேரூப் என்று பைபிளில்
குறிப்பிடப்படும் நபர் யார்?
பதில்:
கேருப் என்கிற எபிரேய வார்த்தை –
ஒருமை தன்மையுடையது.
கேருபீன் – பன்மை.
மேலும் அவை நான்கு அடுக்கு அல்லது
கலவை தன்மை என்று சொல்லப்படுகிறது.
அதாவது – மனிதன் (ஞானம் அறிவு), எருது
(பலம்), சிங்கம் (அதிகாரம்) மற்றும் கழுகின் (துரிதம்
மற்றும் பரவலான கூர்மையான பார்வை) உருவங்களை ஒன்று
சேர்ந்தது. ( எசே 1:5-14)
கேருபீன் – தூதன் என்று வேதாகம்தில்
காணமுடியாது.
கேருபீன் என்கிற எபிரேய வார்த்தைக்கு
– பற்றிபிடித்திருப்பது (Holding fast) என்று
பொருள்.
இந்த வார்த்தையை முதலாவது ஆதியாகமம்
3:24ல் காணமுடிகிறது.
மேலே குறிப்பிடப்பட்ட உருவகங்களை
வைத்து நாம் கற்பனை செய்து கொள்ளகூடாது.
அவைகள் தன்மையை வெளிபடுத்தும் வகையில்
சொல்லப்பட்டவை.
நன்றி
எடி ஜோயல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக