வியாழன், 18 ஏப்ரல், 2019

#107 கேள்வி : மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்

#107
கேள்வி :
மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?

1 கொரி 15:29 இது எப்படியாகும் பதில்கொடுக்கவும்.

பதில்:
கொரிந்து சபையிலிருந்து பவுலிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், அந்த சபையை குறித்து அவர் கேள்விப்பட்ட சில விஷயங்களை குறித்தும் எழுதின  நிருபம் கொரிந்தியருக்கான நிருபம்.

15ம் அதிகாரமாக வரும் இந்த பாகமானது இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலை குறித்த விளக்கம் அடங்கியது.

அங்கு சிலர் கிறிஸ்து உயிர்த்தெழவே இல்லை என்று சொன்னார்கள் (1கொரி15:12) – அதை விளக்கும் வண்ணமாக இந்த பகுதி வருகிறது.

யூதர்களில் – சதுசேயர் என்றும் பரிசேயர் என்றும் இரண்டு பிரிவினர் உண்டு.

சதுசேயர்கள் – உயிர்தெழுதலை நம்பாதவர்கள். அப் 23:8

என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

பிரசேயர்கள் – உயிர்த்தெழுதலை நம்புகிறவர்கள்.

யாராயிருந்தாலும் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டால் நிச்சயம் பரலோகம் போய்விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ஆகவே ஞானஸ்நானம் எடுக்காமல் ஒருவர் மரித்துவிட்டாலும் அவர்கள் சார்பாக வேறொருவர் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்வது அவர்கள் வழக்கமாக இருந்தது.

உயிர்த்தெழுதல் இல்லையென்று ஒரு கூட்டம் அங்கு சொல்லிக்கொண்டிருக்க (1கொரி 15:12)

சதுசேயரை பார்த்து அவர் எதிர்மறையாக கேட்கிறார் – உயிர்தெழுதல் இல்லை என்றால் அவர்கள் எந்த நம்பிக்கையில் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள் என்று வினவினார்?

வேதாகமத்தின்படி :

ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்றால் -

* ஞானஸ்நானத்தை எடுப்பவர் – வசனத்தை தன் செவியாலே கேட்க வேண்டும் (ரோ 10:11-17)

* ஞானஸ்நானத்தை எடுப்பவர் – வசனத்தை நம்ப வேண்டும் (ரோ 1:16-17, 8:34, எபி 11:6, அப் 16:31)

* ஞானஸ்நானத்தை எடுப்பவர் – தான் செய்து கொண்டிருக்கும் செயலை விட்டு மனந்திரும்ப வேண்டும் (ரோ 2:4-5, 6:1-2, அப் 17:30-31)

* ஞானஸ்நானத்தை எடுப்பவர் – தான் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று வாயாலே சொல்ல வேண்டும். (ரோ 10:8-10, மத் 10:32-33)

* ஞானஸ்நானத்தை எடுப்பவர் – (முழுகி) ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் (ரோ 6:3-4, 8:1, மாற்கு 16:15-16, 1பேது 3:21, அப் 22:16)

அப்போது தேவனிடத்திலிருந்து,  அது வரைக்கும் செய்த பாவங்களை மன்னிக்க பெறுகிறார்.

அது முதற்கொண்டு இரட்சிப்பின் பாதையில் பிரயானம் செய்கிறார் – இரட்சிக்கப்படுகிறார்.

ஆகவே ஞானஸ்நானம் பெற்றபின் இரட்சிப்பு வருகிறது !!! (அப் 2:47, மாற்கு 16:16)

கொரிந்தியர் புத்தகத்தின் வேத ஆராய்ச்சி வகுப்பில் வரும் இந்த தலைப்பின் வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=c_0hxyUiTks

Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

*எங்களது கேள்வி & வேதாக பதில் (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

அனைத்து பதிவுகளையும் காண :
https://joelsilsbee.blogspot.com/
https://joelsilsbee.wordpress.com/qa/

வேதவகுப்புகள் மற்றும் தேவசெய்திகளைக் கேட்க:
https://www.youtube.com/joelsilsbee/playlists
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக