திங்கள், 4 மார்ச், 2019

Daily Dose 4-3-19

சிலுவை பரியந்தம் தம்மை தாழ்த்தி நமக்கு மாதிரியை காண்பித்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பெருமையும், கவுரவமும், அந்தஸ்தும் ஒருபோதும் மனுஷனை வாழவிடாது.

உழைப்பும் அர்பணிப்பும் எந்த சூழ்நிலையிலும் நம்மை தாழ்த்திடாது.

வானத்திலிருந்து - பெரிய படையோடும் ஆடம்பரதோடும் தங்க கிரீடம் வைத்துக்கொண்டோ, தங்க தோடு போட்டு கொண்டோ, அக்கினி பறக்கும் பட்டயம் வைத்துக்கொண்டோ, நாக்கையும் கண்களையும் பெரிதாக்கி தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும், பயப்பட வேண்டும் என்றோ ஒரு போதும் நினைக்காமல் :

கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து, தேவ குமாரனாக மாம்சத்தில் வெளிப்பட்டு ஏழை வீட்டில், சாதாரண பெத்லேகேம் கிராமத்தில் பிறந்து, எல்லோரும் ஒதுக்கின ஊராகிய நாசரேத்தில் வளர்ந்து (யோ 1:46) தாழ்த்தப்பட்ட  கலிலேயாவில் ஊழியம் செய்து (யோ 7:52) சர்வ சூழ்நிலையிலும் தாழ்மையை வெளிபடுத்தி, தன் பிதாவாகிய தேவனின் கட்டளையை நிறைவேற்றி, வெற்றி சிறந்து – எல்லாருடைய  கண்கள் முன்பாகவும் தூதர் சூழ பரலோகம் ஏறி சென்றார்..

கிறிஸ்துவின் அடிசுவடியை நாம் பின்பற்றி – அவரைப்போல தாழ்மையோடு இருப்போம்... ஆண்டவர் உயர்த்துவார் !!

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Subscribe at https://joelsilsbee.blogspot.com

Greetings to you in the name of our Lord Jesus Christ, who kept Himself as an example to us showing His humbleness till the Cross.

Pride, stature and honour seeking attitude will never let a man live in peace.

Work and dedication will never let you down at any situation.

Instead of coming with a big army or crowd, with gold crown, gold earrings, fiery sword, expelled tongue & eyes so others to fear; 

Our Ever Living Lord Jesus Christ came to this world in flesh - born in a poor simple house in a unfamiliar Bethlehem village, lived in sequestered place Nazareth (John 1:46), ministered mostly in the destituted Galilee (John 7:52), humbled Himself till the cross to obey Father in Heaven and accomplished succesfully. So He climbed to Heaven in front of many eyes victoriously !!

Let us follow the footsteps of our Lord Jesus Christ – stay humble like Him ---
so He will exalt !!

*Eddy Joel*
+968 93215440

Subscribe at https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக